tamilnadu

img

நெய்மர் வேணும் அடம்பிடிக்கும் பார்சிலோனா

பிரேசில் அணியின் கேப்டனும், பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி)  அணியின் நட்சத்திர வீரருமான நெய்மர் தொடக்கத்தில் ஸ்பெயின் கால்பந்து அணி கிளப்பான பார்சிலோனாவில் தான் விளையாடினார்.  பின்னர் பிரான்ஸ் நாட்டின் கிளப் அணியான பிஎஸ்ஜி 222 மில்லியன் பவுண்டு (சுமார் 1900 கோடி ரூபாய்) அளித்து நெய்மரை வாங்கியது.

நெய்மரும் பிஎஸ்ஜி அணிக்கு சிறப்பாக விளையாடிக் கோப்பையும் வென்று கொடுத்தார்.   இந்நிலையில் வீரர்களின் பார்ம் பிரச்சனையில் சிக்கி வெற்றியைக் குவிக்க முடியாமல் திணறி வரும் பார்சிலோனா பிரான்ஸ் கால்பந்து அணியின் கேப்டனும் ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரருமான கிரிஸ்மேனை 120 மில்லியன் பவுண்டுக்கு (1000 கோடி ரூபாய்) வாங்கியது.அடுத்து நெய்மரை பிஎஸ்ஜியிடம் கேட்டது.

ஆனால் பிஎஸ்ஜி அணி நிர்வாகம் முதலில் மறுத்தது. பேச்சுவார்த்தைக்கு பின்பு 300 மில்லியன் பவுண்டு (2500 கோடி ரூபாய்) கேட்டது.  பிஎஸ்ஜி கேட்கும் 300 மில்லியன் பவுண்டை கொடுக்க விரும்பாத பார்சிலோனா 90 மில்லியன் பவுண்டும், எங்கள் அணியில் இரண்டு பேரை தருகிறோம் எனத் தூதுவிட்டது. பிஎஸ்ஜி பிரான்ஸ் நாட்டின் வசதி படைத்த கால்பந்து கிளப் அணிகளில் ஒன்று என்பதால் பண விவகாரத்தில் அந்த அணி நிர்வாகம் வளைந்து கொடுப்பது சந்தேகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.