பிரிஸ்டல்
1889-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மைதானத்தில் அதிகபட்சமாக 15,000 பேர் போட்டியை ரசிக்கலாம். கேலரி இருக்கைகள் (மூன்று புறம் மட்டும்) அதிகம் கிடையாது. விழாக்கால இருக்கை மற்றும் புல்வெளி தரையில் தான் அமர்ந்து போட்டியை ரசிக்க வேண்டும்.
தன்மை : பேட்டிங்கிற்கு நன்கு ஒத்துழைக்கும். ஸ்விங் மிதமாக எகிறும். இந்திய ஆடுகளங்களைப் போன்று சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருக்கும்.
உலகக்கோப்பை ஆட்டங்கள்
ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா (ஜூன் - 1)
பாகிஸ்தான் - இலங்கை (ஜூன் - 7)
வங்கதேசம் - இலங்கை (ஜூன் - 11)
மான்செஸ்டர்
இங்கிலாந்து நாட்டின் பழமையான ஆடுகளங்களில் இதுவும் ஒன்று.1857-இல் கட்டப்பட்ட இந்த ஆடுகளத்தில் 26,000 பேர் போட்டியை ரசிக்கலாம்.
தன்மை : பிட்ச் மையத்தை நன்கு கணித்தால் நன்றாக ரன் குவிக்கலாம். பவுன்சர் அதிகமாக எகிறும். சுழற்பந்து வீச்சின் தாக்கமும் அதிகமாக இருக்கும்.ஆடுகளத்தின் பரப்பு பெரியதாக இருப்பதால் சிக்ஸர் விளாசுவது சிரமமான விஷயம்.
உலகக்கோப்பை ஆட்டங்கள்
இந்தியா - பாகிஸ்தான் (ஜூன்-16)
இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் (ஜூன்- 18)
விண்டீஸ் - நியூஸிலாந்து (ஜூ ன் - 22)
இந்தியா-விண்டீஸ் (ஜூன் - 27)
ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா(ஜூலை - 6)
முதலாவது அரையிறுதி ஆட்டம்
பிர்மிங்ஹாம்
இங்கிலாந்து நாட்டில் உள்ள மிகப்பெரிய மைதானங்களுள் இதுவும் ஒன்று. 1882-இல் கட்டப்பட்ட இந்த மைதானத்தில் 25,000 பேர் போட்டியை ரசிக்கலாம்.
தன்மை ; பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிற்கும் சாதகமாக இருக்கும். ஸ்விங் அதிகமாக எழும்பும்.பிட்ச் பகுதியில் புற்கள் அதிகமாக இருந்தாலும் பவுன்சருக்கு இடமில்லை. இரண்டாவது பேட்டிங்கில் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும்.
உலகக்கோப்பை ஆட்டங்கள்
யூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா (ஜூன் - 19)
நியூஸிலாந்து - பாகிஸ்தான் (ஜூன் - 26)
இங்கிலாந்து - இந்தியா (ஜூன் - 30)
வங்கதேசம் - இந்தியா (ஜூலை - 2)
இரண்டாவது அரையிறுதி ஆட்டம்