tamilnadu

img

பட்டியல் வெளியீடு மதிப்புமிக்க கிளப் அணிகள்

போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டு தோறும் விளையாட்டு உலகில் மதிப்புமிக்க கிளப் அணிகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான பட்டியலில் அமெரிக்க ரக்பி அணியான டல்லாஸ் கவ்பாய்ஸ் 5 பில்லியன் டாலர் மதிப்போடு முதலிடத்தைப் பிடித்துள்ளது. நியூயார்க் யங்கீஸ் என்ற பேஸ்பால் கிளப் அணி 4.6 பில்லியன் டாலருடன் 2-வது இடத்தையும், ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணி யான ரியல் மாட்ரிட் 4.24 பில்லியன் டாலருடன் 3-வது இடத்தையும், பார்சிலோனா 4.02 பில்லியன் டாலருடன் 4-வது இடத்தையும் பிடித்துள்ளன. நியூயார்க் கினிக்ஸ் கூடைப்பந்து அணி 4 பில்லியன் டாலர் மதிப்போடு 5-வது இடத்திலும், கால்பந்து உலகின் பணக்கார கிளப் அணியாகக் கருதப்படும் மான்செஸ்டர் யுனைடெட் 3.81 பில்லியன் டாலர் மதிப்போடு 6-வது இடத்திலும் உள்ளன. கடந்தாண்டு மான்செஸ்டர் யுனைடெட் இரண்டாவது இடத்தில் இருந்தது என்பது குறிப் பிடத்தக்கது.