tamilnadu

img

இந்திய கால்பந்து அணிக்கு பயிற்சியாளர் நியமனம்

குரேஷியா நாட்டு அணியின் முன்னாள் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமேக் இந்திய ஆடவர் கால்பந்து அணிக்கு பயிற்சியாளராக பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


இந்திய ஆடவர் கால்பந்து அணிக்காக பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் பணியை அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின்(AIFF-All India Football Federation) அறிவுசார் குழு கடந்த சில வாரங்களாக செய்து வந்தது. இறுதியாக முன்னணி பயிற்சியாளர்கள் நான்கு பேரை நேர்முக தேர்வு செய்தது. இதனடிப்படையில் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் அறிவுசார் குழு குரேஷியா நாட்டு முன்னாள் பயிற்சியாளர் இகோர் ஸ்டிமேக்கை தேர்வு செய்து கால்பந்துக்கான செயற்குழுவுக்கு அனுப்பியுள்ளது.


இகோர் ஸ்டிமேக் கடந்த 2012லிருந்து 2014ம் ஆண்டு வரை குரேஷிய நாட்டு அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர். இவர் கடந்த 1998ல் FIFA உலகக்கோப்பை தொடரில் 3ம் இடம் பிடித்த குரேஷிய அணியில் விளையாடியவர்.