tamilnadu

img

குடிநீர் கேட்டு சாலை மறியல்

காஞ்சிபுரம், மே 30-காஞ்சிபுரம் மாவட்டம்வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்டு 15 வார்டுகள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்காக பாலாற்றுப் படுகையில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் 5 நாட்களுக்கு ஒரு முறை  குடிநீர் சுழற்சிமுறையில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாலாஜாபாத் பேரூராட்சிக்குட்பட்ட சேர்க்காடு பகுதியில் வியாழனன்று (மே 30) குடிநீர் விநியோகிக்கப்பட வேண்டும். இதனால் பொதுமக்கள் காலை முதலே காலி குடங்களுடன் நீண்ட நேரம் காத்து இருந்தனர். பல மணி நேரம் காத்திருந்து, தண்ணீர் வரவில்லை. குடிநீர் வராததைக் கண்டுமக்கள் ஆவேசம் அடைந்தனர். இதனை அடுத்து காலி குடங்களுடன் நூற்றுக்கும்மேற்பட்டோர் வாலாஜாபாத்- தாம்பரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதுபற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பேரூராட்சி அலுவலரிடம் தெரிவித்து, குடிநீர் சீராக விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.