tamilnadu

பழங்குடியினருக்கு தொகுப்பு வீடுகள்

காஞ்சிபுரம், டிச.23- காஞ்சிபுரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் உத்திரமேரூர் வட்டம், சடச்சவாக்கம் இருளர் காலனியில் கட்டப்பட்ட 6 தொகுப்பு வீடுகளை உரிய பயனாளிகளிடம் ஆட்சியர் பா. பொன்னையா திங்களன்று (டிச.23) ஒப்படைத்தார். மேலும், காஞ்சிபுரம் வட்டத்தில் நத்தப்பேட்டை, விப்பேடு, ஒழவூர் இருளர் காலனிகளிலும், வாலாஜாபாத் வட்டத்தில் புளியம்பாக்கம் இருளர் காலனியிலும், ரூ. 3 லட்சம் மதிப்பில் தொகுப்பு வீடுகள் கட்டுவதற்கு 12 பயனாளிகளுக்கு பணி ஆணையை ஆட்சியர் வழங்கினார். இந்நிகழ்வுகளில் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமூர்த்தி ஆதிதிராவிடர் நலத்துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், மானாம்பதி கிராமம் இருளர் இனத்தை சேர்ந்த 17 நபர்களுக்கு பட்டாவும், மதுராந்தகம் கோட்டத்தில் சாலை விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்த 11 நபர்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியின் கீழ் ரூ.9.5 லட்சம் நிவாரணத் தொகையை தாம்பரம் வட்டாட்சியர் வழங்கி னார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மூன்று சக்கர வண்டி 1 நபருக்கும், சக்கர நாற்காலி 1 நபருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான சுய தொழில் செய்ய வங்கிக் கடன் மற்றும் மான்யம் 3 நபர்களுக்கும், மனவளர்ச்சிக் குன்றிய மாற்றுத் திறனாளிகளுக்கான மாதம் ரூ. 1500 வீதம் 4 நபர்களுக்கு என 9 பயனாளிகளுக்கு 1 லட்சத்து 62 ஆயி ரத்து 900 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா வழங்கினார்.