காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட நத்தப்பேட்டை பகுதியில் 2007 ஆம் ஆண்டு குடிமனைப்பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இன்று வரை கிராம கணக்கில் ஏற்றப்படவில்லை. இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் புதன்கிழமை (நவ. 27) நகரக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் ஆர்ப்பாட்டத்தை துவக்கிவைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பாஸ்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.சௌந்தரி, இ.லாரன்ஸ், எம்.ஆறுமுகம், நகரக்குழு உறுப்பினர் ஒய்.சீதாராமன், வட்டக் குழு உறுப்பினர் ஜி.வசந்தா,கிளைச் செயலாளர் ஐ.சேட்டு உட்பட பலர் கலந்து கொண்டனர்.