காஞ்சிபுரம் குழந்தை ஏசு பள்ளியில் 1997 முதல் 2018 வரை பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.இப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த தற்போதைய தமிழக அரசின் வணிக வரித் துறை ஆணையர் சுந்தரவல்லி ஐ.ஏ.எஸ் மற்றும் கா ஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் காவல் கண்காணிப்பாளர் சரவண பெருமாள் ஐ.பி.எஸ் உள்ளிட்ட ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பள்ளி கால நிகழ்வுகளை தங்களுடைய உடன் படித்தவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.