tamilnadu

img

பாக்கித் தொகை கேட்டு தரணி ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கள்ளக்குறிச்சி, மார்ச் 11-  தியாகதுருகம் அருகே கலைய நல்லூரில் அமைந்துள்ள தனியார் சர்க்கரை ஆலையான தரணி சுகர்ஸ் 3 ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிக ளுக்கு தர வேண்டிய எஃப்ஆர்பி பாக்கித் தொகை ரூ. 23 கோடியை உடனடியாக வழங்கக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் கரும்பு விவசாயிகள் ஆலை முன்பு  புதனன்று (மார்ச் 11) முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன்  பேசியதாவது:- தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அமைந்துள்ள தனியார் தரணி சர்க்கரை ஆலை  ரூ. 80 கோடியும், ராஜஸ்ரீ சர்க்கரை ஆலைகள் ரூ. 25 கோடியும், சக்தி சுகர்ஸ் 3 ஆலைகளி லும் ரூ.50 கோடியும், அம்பிகா ஆரூரான் 4 சர்க்கரை ஆலைகளிலும் ரூ. 80 கோடியும் எஃப்ஆர்பி பாக்கி உள்ளது. இது மொத்தம் ரூ. 225 கோடி  ஆகும். 14 நாளில் கரும்பிற்கான பணம் தர வேண்டும் என சட்டம் இருந்தும் 14 மாதம் ஆகியும் இந்த பாக்கித் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட வில்லை. இதனை பெற்றுத்தர மாநில அரசும் எந்த முயற்சியும் எடுக்க வில்லை. மேலும் அம்பிகா ஆரூரான் சர்க்கரை ஆலைகள் நான்கும் பாக்கித் தொகையை தராமலேயே மூடப்பட்டுவிட்டன. இதுதவிர 2013 ஆம் ஆண்டு முதல் 17ஆம் ஆண்டு வரை மாநில அரசு பரிந்துரை விலை (எஸ்ஏபி) பாக்கி மட்டும் ரூ. 1217 கோடி சர்க்கரை ஆலைகள் விவசாயி களுக்கு பாக்கி தர வேண்டியது உள்ளது. ஆக மொத்தம் சுமார் ரூ.1500 கோடி  தனியார் சர்க்கரை ஆலை கள் பாக்கி வைத்துள்ளன. இதனை பெற்றுத்தர மாநில அரசின் முயற்சிகள் ஏதும் இல்லை.  இதன் விளைவாக கடந்த காலங்க ளில் தமிழகத்தில் இரண்டரை கோடி டன் கரும்பு உற்பத்தி ஆன நிலையில் 2019-20 ஆம் ஆண்டுகளில் வெறும் 75 லட்சம் டன் மட்டுமே கரும்பு உற்பத்தி ஆகியுள்ளது. இது தமிழகத்தில் எந்த அளவு கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி போல வெளிப்படையாக காட்டு கிறது.  இந்தியா முழுவதும் ஓரளவிற்கு கரும்பு உற்பத்தி கடந்த காலங்களை விட குறையாத நிலையில் தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்குக்கும் கீழே கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதற்கு காரணம் விவசாயிகளுக்கு கரும்புக்கான பணத்தை உடனடியாக தராமல் ஆலை முதலாளிகள் சூறையாடிக் கொண்டு இருப்பதுதான். தமிழ கத்தில் கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்து இருப்பதை பற்றி நாடாளு மன்றத்திலேயே பேசப்பட்டுள்ளது.  எனவே மாநில அதிமுக அரசு உடனடியாக கரும்பு விவசாயி களுக்கு மேற்கண்ட பாக்கித் தொகை ரூ.1500 கோடியை பெற்றுத்தர நட வடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யெனில் தனியார் சர்க்கரை ஆலை களை அரசு கையகப்படுத்தி உடனடி யாக விவசாயிகளுக்கு பாக்கிப் பணத்தை கொடுத்து தொடர்ந்து கரும்பு அரவை பணியை அரசே நடத்த வேண்டும். தரணி 3 கலையநல்லூர் ஆலை நிர்வாகம் பாக்கித் தொகை 23 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு தரும்வரை இங்கே நடைபெறவிருந்த முற்றுகை போராட்டம் காத்திருப்புப் போராட்டமாக தொடர்ந்து நடை பெறும். இவ்வாறு அவர் பேசினார். இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கள்ளக் குறிச்சி மாவட்டச் செயலாளர் ஏ.வி.ஸ்டாலின்மணி, தலைவர் வி.ரகு ராமன், சிபிஎம் வட்டச் செயலாளர் பி.மணி, நிர்வாகிகள் ஆர்.சீனி வாசன், ஜி.அருள்தாஸ், கே.ஜெய மூர்த்தி, ஆர். மகேந்திரன் ஏ.ராஜ கோபால், சி.ஏழுமலை, கே.குப்பு சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கரும்பு விவசாயிகள் அங்கேயே அடுப்பு மூட்டி சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தையும் நடத்தினர்.

;