tamilnadu

வனப் பகுதியில் பெண் எலும்புக்கூடு

கள்ளக்குறிச்சி, ஜூலை 19- கள்ளக்குறிச்சி மாவட்டம் மலைக்கோட்டாலம் அருகே  உள்ள வனப்பகுதியில் அடையாளம் தெரியாத பெண்ணின்  எலும்புக்கூடு கிடந்தது. அதைக் கைப்பற்றி காவல்துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வனப்பகுதியின் மங்குகுன்று என்ற இடத்தில் கிடந்த எலும்புக் கூட்டினை கண்ட வனக்காப்பாளர் நெல்சன் மண்டேலா காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். விழுப்புரம் வட்டார தடய அறிவியல் இயக்குனர் சண்முகம்,  காவல்துறை உளுந்தூர்பேட்டை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். இதில் அந்த பெண் எலும்புக் கூட்டின் வயது 60 இருக்க லாம் என்றும், சடலத்தை நாய், நரி உள்ளிட்ட விலங்குகள் சேதப்படுத்தி இருப்பதும் தெரியவந்தது. பின்னர் எலும்புக் கூட்டினை மீட்டு பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வரஞ்சரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.