tamilnadu

img

குடிநீர் ஆதாரமான பூண்டி குளத்தை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை

கள்ளக்குறிச்சி, ஜூலை 11- பல்வேறு கிராம மக்களின் தாகம் தீர்த்த குளம் தற்போது பராமரிப்பின்றி கரைகள் இடிந்த நிலையில் பாழடைந்து கிடக்கிறது. குளத்தை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தி யத்தில் இருந்து எறையூர் செல்லும் சாலை யில் அமைந்துள்ளது பூண்டி கிராமம். இந்த  கிராமத்தின் சாலையோரம் 1924ஆம் ஆண்டு  அப்போதிருந்த வேட்டவலம் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த பரமானந்த நயினார் என்பவர் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் குளம் ஒன்றை உருவாக்கினார். ரிஷிவந்தியம் எறையூர் செல்லும் பாதை அந்தக் காலத்தில் ஒற்றையடிப் பாதையாக இருந்த நிலையில் இவர்களின் முன் முயற்சி யால் சாலை அகலப்படுத்தப்பட்டு தற்போது  பல ஆண்டுகளாக பேருந்து செல்லும் வகை யில் தார் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. குளத்தைச் சுற்றி கருங்கற்களால் கரைகள்  அமைக்கப்பட்டுள்ளன. ஒருபுற கரையில் கிரா மத்தில் வசிப்போர் குடிநீர் எடுத்துச் செல்ல  வசதியாக 18 படிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போதும் சாலை மற்றும் குளத்தின் வர லாற்றைக் கூறும் கல்வெட்டு எறையூர் கிரா மத்தில் உள்ளது. காலப்போக்கில் பரா மரிப்பின்றி சில இடங்களில் குளத்தின் கரை கள் சேதமடைந்துள்ளன. பல நூற்றுக் கணக்கான ஏக்கர் வனத்துறை காப்புக் காடு கள் இங்கு அமைந்துள்ளன. இவற்றில் வசிக்கும் மான், மயில், நரி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகளுக்கும் இந்தக் குளம் குடிநீர் ஆதாரமாக இருந் துள்ளது. நல்ல ஆழத்துடன் வெட்டப்பட்ட இந்த குளத்தை சீரமைத்தால் அப்பகுதியில் கால்  நடைகள் குடிநீர் அருந்துவதற்கும்,  நீரா தாரத்தை மேம்படுத்துவதற்கும் பயன்படும் என்று விவசாயி ரமேஷ் தெரிவித்தார். எனவே தற்போது பருவமழை துவங்கி யுள்ள நிலையில் நூற்றாண்டு வரலாற்றை நினைவு கூறும் வகையில் உள்ள  குளத்தை  மாவட்ட நிர்வாகம் சீரமைத்து குடிநீர் ஆதா ரத்தை பெருக்க வேண்டும் என அந்த கிராம  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;