tamilnadu

img

சட்டமன்றத்தில் ஆபாசப் படம் பார்த்தவர் துணைமுதல்வர்

பெங்களூரு:
கடந்த 2012-ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத்திற்குள், அதுவும் அவை நடந்துகொண்டிருக்கும்போது, லட்சுமண் சாவடி, சி.சி. பாட்டீல் மற்றும் கிருஷ்ணா பாலேமார் ஆகிய 3 பாஜக எம்எல்ஏ-க்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்து மாட்டிக்கொண்டனர்.
இவ்விவகாரம் அப்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்றுஎதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, பெண்கள்அமைப்புக்கள் உட்பட பலரும் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, 3 எம்எல்ஏ-க்களும் பதவியை ராஜினாமாசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இந்நிலையில்தான், 2012-ஆம் ஆண்டு, எந்த எம்எல்ஏ, ஆபாசப்படம் பார்த்ததற்காக பதவியை இழந்தாரோ, அவருக்கு தற்போது கர்நாடக துணை முதல்வர் பதவி வழங்கி பாஜக கௌரவித்துள்ளது.இவ்வளவுக்கும் லட்சுமண் சாவடிதற்போது எம்எல்ஏ-வாகவும் இல்லை.2018 சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுப்போன அவரை, பாஜக தலைமை தேடிப்பிடித்து பதவி வழங்கியுள்ளது.இதற்கு பாஜக-வின் மூத்த எம்எல்ஏ-க்களான உமேஷ் காட்டி,ரேணுக்காச்சார்யா உள்ளிட்டவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். லிங்காயத் சமூகத்தில் சாவடிக்கு இருக்கும் செல்வாக்கே அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதற்கு காரணம் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

;