பெங்களூரு:
கர்நாடகத்தில், அண் மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் (எஸ்) கூட்டணி தோல்வி அடைந்ததால், விரைவில் மாநிலத்திலும் ஆட்சி கவிழும் என்று பாஜகவினர் கூறிவருகின்றனர். இந்நிலையில், “எனது தலைமையிலான கூட்டணி அரசு5 ஆண்டு ஆட்சி காலத்தைமுழுமையாக நிறைவு செய்யும். சட்டப்பேரவைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை” என்று முதல்வர் குமாரசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.