tamilnadu

img

கர்நாடக அரசுக்கு தொடரும் நெருக்கடி

பெங்களூரூ, ஜூலை 9 - கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நீடிக்கிறது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10  பேர், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்எல்ஏக்கள் 3 பேர், சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் என 15 பேர்  ராஜினாமா செய்திருப்பதால் குமாரசாமி தலைமையிலான அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்ற நிலையில் ஊசலாடி வருகிறது. அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர் மும்பையில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்து சமாதானப்படுத்து வதற்காக அமைச்சர்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை முதலமைச்சர் குமாரசாமியிடம் அளித்துள்ளனர். இந்த நிலையில் எம்எல்ஏக்கள் அளித்துள்ள ராஜினாமா கடிதங்களை ஏற்பது குறித்து விதிமுறைப்படி தான் முடிவு எடுக்க முடியும் என்று  சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள் ளார். 5 எம்எல்ஏக்கள் அளித்துள்ள ராஜி னாமா கடிதங்கள் தான் முறைப்  படி இருப்பதாகவும், 8 எம்எல்ஏக் களின் கடிதங்கள் சட்ட விதிமுறைப் படி இல்லை என்றும் அவர் குறிப் பிட்டுள்ளார். எனவே  அவர்கள் 8 பேரும் மீண்டும் ராஜினாமா கடிதங்களை அளிக்க வேண்டும் என்றும், ராஜினாமா செய்வது குறித்து 13 பேரும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். எம்எல்ஏக்கள் 13 பேரும் தனது முன்பு  ஆஜராக கால அவகாசம் வழங்கப் பட்டுள்ளது என்று கூறி, ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் சபாநாயகர் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே கட்சி விதிமுறை களை மீறிய அதிருப்தி எம்எல்ஏக் களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சபாநாயகர் ரமேஷ்குமாரி டம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு, பின்னர் பதவி விலகிய எம்எல்ஏ ரோஷன் பெய்க்கிற்கு, ஐஎம்ஏ  நிதி முறைகேடு தொடர்பான விசார ணைக்கு ஆஜராகுமாறு சிறப்பு விசார ணைக்குழு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கிடையே, அதிருப்தி எம்எல்ஏக் களை பின்னணியில் இருந்து பாஜக இயக்குவதாக கூறப்படும் புகாரில் உண்மையில்லை என்று கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா விளக்கம் அளித்தார். கட்சித் தலைமை மீது நம்பிக்கையில்லாமல் அவர்கள் பதவி விலகி இருப்பதாகவும் அவர் கருத்து தெரிவித்தார். இந்த விவகாரம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிரொலித்தது.

;