கரூர், டிச.12- தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக்குழுவின் சார்பில் அரி தான நெருப்பு வளைய சூரிய கிரக ணத்தை பார்பதற்கான செயல்முறை பயிற்சி மற்றும் விளக்க கூட்டம் காந்தி கிராமம் விஜயலட்சுமி வித்யாலயா இண்டர்நேஷனல் பள்ளியில் நடை பெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர் ஐ.ஜான்பாஷா தலைமை வகித்தார். கரூர் மாவட்ட கல்வி அலுவலர் பா.சிவ ராமன் கூட்டத்தை துவக்கி வைத்து பேசி னார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாநில செயற்குழு உறுப்பினரும், மாநில அறிவியல் கருத்தாளர் ஜெய முருகன் பேசியதாவது, வரும் 26 ம் தேதி காலை 8 மணி 6 நிமிடம் முதல் 11 மணி 10 நிமிடம் வரை அரிதான நெருப்பு வளைய சூரிய கிரகணம் நடக்கிறது. கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் கட்டாயம் பார்க்கக் கூடாது. பாதுகாப்பான ஊடகம், தொலை நோக்கி கண்ணாடிகள் வழியாகத் தான் பார்க்க வேண்டும். ஊட்டியில் அதிகபட்ச மாக காலை 9.27 நிமிடம் முதல் 9.30 மணி வரை மூன்று நிமிடம் முழு சூரிய கிரகணத்தை பார்க்கலாம். கரூர் மாவட்டத்தில் 90 ஆண்டு களுக்கு பிறகு தான் இதுபோன்ற சூரிய கிரகணத்தை பார்க்க முடியும், இந்த சூரிய கிரகணம் பார்ப்பதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நவீன தொலைநோக்கி கண்ணாடி சுமார் 5000 தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க உள்ளனர். மேலும் சூரிய கிரகணம் பற்றிய விளக்க புத்தம் ஒன்றும் வழங்கப்படுகிறது என்றார். முன்னதாக பள்ளியன் முதல்வர் முபின் வரவேற்று பேசினார். கூட்டத்தில் அறிவியல் இயக்க மாவட்ட நிர்வாகி கள் ஜெயராஜ், இளங்கோ, ரோட்டரி பாஸ்கர், யாஸ்மின், அம்சவள்ளி மற்றும் அரசு. தனியார் பள்ளி ஆசிரியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.