tamilnadu

புதுக்கோட்டை, கரூர் முக்கிய செய்திகள்

புதுக்கோட்டை அருகே கோர விபத்து: 6 பேர் பலி
புதுக்கோட்டை, ஆக.7- புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அடுத்த டுத்து 7 கார்கள் புதன்கிழமையன்று ஒன்றன்பின் ஒன்றாக மோதிக்கொண்ட கோரவிபத்தில் 6 பேர் பலியாகினர். 15 பேர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் புதன்கிழமை மாலை புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி துடை யூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் பயணம் செய்துகொண்டி ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்த தில் கார் தாறுமாறாக ஓடி எதிரே வந்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இச்சம்பவத்தை அடுத்து இருபுறமும் அடுத்தடுத்து வந்த 5 கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாயின.  இந்த விபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் துடையூரைச் சேர்ந்த கார் ஓட்டுனர் சிதம்பரம், முத்துக்காட்டை சேர்ந்த ரெங்க ராஜன், நாகரத்தினம் என்ற பெண்மணி உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த நான்கு குழந்தைகள் உட்பட 15க்கும் மேற்பட்டோர் போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் கண்கா ணிப்பாளர் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு போக்குவரத்து பாதிப்பை சரி செய்தார். போலீ சார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வேகமாக வந்த காரின் டயர் வெடித்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் மற்றொரு கார் மீது மோதியது என்றும், இச்சம்பவத்தை தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக 7 கார் மோதியது என்றும் விபத்தில் காயமடைந்தவர்கள் புதுக்கோட்டை மற்றும் சிவ கங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

கரூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் போலீசார் தீவிர விசாரணை
கரூர், ஆக.7- கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு திங்கட்கிழமை கடி தம் மற்றும் போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை யடுத்து தீவிர நீதிமன்றத்தில் சோதனை நடத்தப்பட்டது. கரூர்-திண்டுக்கல் சாலையில் தாந்தோணிமலையில் கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவல கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் போன்ற முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலை யில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற அலுவலகத்திற்கு திங்கள்கிழமை பிற்பகலில் ஒரு மர்ம போன் வந்துள்ளது. போனில் பேசிய மர்ம நபர் இன்றோ அல்லது நாளையோ நீதிமன்றத்திற்குள் வெடிகுண்டு வெடிக்கும் என பேசிவிட்டு வைத்துவிட்டான்.  இதேபோல மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முக வரிக்கு மர்ம கடிதமும் வந்துள்ளது. அந்த கடிதத்தில் ஆக.5,6-ம் தேதிகளில் நீதிமன்றத்தில் பிளாஸ்டிக் வெடிகுண்டு வெடிக்கும். அந்த வெடிகுண்டு வெடிக்கும்போது நீதிமன்றம் இருந்ததற்கான எந்தவித தடயமும் இருக்காது என குறிப்பிட்டிருந்ததாம். உடனே மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற ஊழியர்கள் அனை வரும் வெளியேற்றப்பட்டு இரவில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நீதிமன்றம் முழு வதும் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனையில் எதுவும் சிக்கவில்லை. தொடர்ந்து இரவு முழுவதும் நீதி மன்றத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் காலையிலும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.