tamilnadu

img

ஜன.8 பொது வேலை நிறுத்தத்திற்கு அங்கன்வாடி ஊழியர் சங்கம் ஆதரவு

கரூர், டிச.14- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் கரூர் மாவட்ட 2-வது மாநாடு கரூரில் மாவட்டத் தலைவர் பத்மாவதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகி சுதா, அஞ்சலி தீர்மானத்தை முன் வைத்து பேசினார். நிர்வாகி விஜயலெட்சுமி வரவேற்று பேசினார். சிஐடியு சங்க மாநில துணைச் செயலாளர் கோபிகுமார் மாநாட்டினை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் சாந்தி வேலையறிக்கையை முன்வைத்து பேசினார். பொருளாளர் கலா, வரவு- செலவு அறிக்கையை முன்வைத்து பேசினார். சிஐடியு சங்க மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம், மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், அரசு ஊழியர் சங்கத்தின் மாநில முன்னாள் துணை தலைவர் மு.சுப்பிரமணியன், கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில பொதுச் செயலாளர் பொன்ஜெயராம், தமிழ்நாடு அரசு ஆய்வக நுட்பநர் சங்க மாநிலச் செயலாளர் செல்வராணி, அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்     கூட்டணியின் மாவட்ட துணைச் செயலாளர் த.சகிலா, அங்கன்வாடி சங்கத்தின் மாநில செயலாளர் ரத்தினமாலா ஆகியோர் பேசினர். சங்கத்தின் மாநிலப் பொருளாளர் பாக்கியம் சிறப்புரையாற்றினார். புதிய மாவட்டத் தலைவராக பத்மாவதி, செயலாளராக சாந்தி உள்ளிட்ட 10 பேர் கொண்ட புதிய நிர்வாக குழு தேர்வு செய்யப்பட்டது. கல்யாணி நன்றி தெரிவித்தார். அங்கன்வாடி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஜனவரி 8-ல் நடைபெறும் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;