கரூர், ஜூலை 6 - தொழிலாளர் சட்டங்களை முடக்காதே உள்ளி ட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனை த்து தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புகளூர் காகித ஆலை முன்பு காகித ஆலைதொழிலா ளர் சங்க கவுரவ தலைவர் ஜி.ஜீவானந்தம் தலைமை வகித்தார்.வேலாயுதம்பாளையம் பைபாஸ் சாலையில் தொமுச மாவட்டச்செய லாளர் அண்ணாவேலு தலைமை வகித்தார். கரூர் சுங்க கேட் ஆட்டோஸ்டாண்ட் முன்பு சிஐ டியு நிர்வாகி ராஜா தலைமை வகித்தார். கரூர் வட்டா ட்சியர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட க்குழு உறுப்பினர் எம்.தண்டபாணி தலைமை வகி த்தார். வெங்கமேடு எம்ஜிஆர் சிலை அருகே மாவட்ட நிர்வாகி சக்திவேல் தலைமை வகித்தார்.