கரூர், ஜூலை 15- சாதி ஆணவத்திற்கு எதிராக போராடி உயிர் நீத்த தோழர் அசோக், கள்ளச்சாரத்திற்கு எதிரான போராட்ட த்தில் களப்பலியான தோழர்கள் குமார், ஆனந்தன் ஆகியோ ரது நினைவு நாட்களையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றி யத்துக்குட்பட்ட கோவக்குளம் கிளை சார்பாக ரத்த தான முகாம் கோவகுளம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழுக்கள், கரூர் நகரக் குழு ஆகிய பகுதிகளிலிருந்து 40-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர். வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் பார்த்திபன் தலைமை வகி த்தார். மாவட்டச் செயலாளர் கே.ராஜா, மாவட்டத் தலைவர் மு.க.சிவா, மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.