tamilnadu

img

தந்தை பெரியாரின் 141-வது பிறந்தநாள் விழா

தருமபுரி, செப்.17- தந்தை பெரியாரின் 141 ஆவது  பிறந்த தினத்தை முன்னிட்டு தருமபுரி மற்றும் பென்னாகரத்தில் பெரியாரின் சிலைக்கு செவ்வா யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப் பினர் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். தருமபுரியில் நடைபெற்ற  நிகழ்வில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. இளம்பரிதி, ஆர்.சிசுபாலன், வே. விசுவநாதன் ஆகியோர் பெரி யாரின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செய்தனர்.  இதில், திமுக நகரச் செயலாளர் டி.பி.தங்கராசு, மதிமுக மாவட்டச் செயலாளர் அ.தங்கராசு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் வீரமணி, வஜ்ரவேல், எச்.எஸ்.சிவலிங்கம், ஜெயபிரகாசம், முக்தியாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் த.ஜெயந்தி, மாவட்ட நிர்வாகிகள் த.கு.பாண்டியன், மின்னல் சக்தி, மன்னன், காங்கிரஸ் கட்சியின் நகரச் செயலாளர் செந்தில்குமார், ஆதிதமிழர் பேரவை மாநிலச் செய லாளர் வீரசிவா மற்றும் திராவிடர் கழக மாநில அமைப்புச் செய லாளர் ஊமை.ஜெயராமன், பகுத் தறிவாளர் கழக மாவட்டச் செய லாளர் தமிழ்ச்செல்வி, திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வேட் ராயன், மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங் கேற்று மாலை அணிவித்தனர். இதைத்தொடர்ந்து, தந்தை பெரியார் பிறந்தநாள் ஊர்வலமும் நடைபெற்றது.       

ரின் 141 பிறந்தநாளை முன்னிட்டு பென்னாகரத்தில் பெரியார் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப் பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் எம்.ஆறு முகம், வி.மாதன், திமுக பொன்ன கரம் சட்டமன்ற உறுப்பினர் பி.என்.பி. இன்பசேகரன், இந்திய  கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் நா. நஞ்சப்பன், மாவட்ட செயலாளர் தேவராஜ், திராவிடர் கழக மாநில  பொதுக்குழு உறுப்பினர் தீர்த்த கிரி, மருத்துவர் தியாகராஜன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.