tamilnadu

img

புரோ கபடி லீக் இன்று தொடக்கம்

இந்திய விளையாட்டுத் துறையில் ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடர் முளைத்த அடுத்த சில ஆண்டுகளில் கபடி, டேபிள் டென்னிஸ், பேட்மிண்டன், டென்னிஸ், ஹாக்கி போன்ற துறைகளிலும் லீக் தொடர்கள் அடுத்தடுத்து மலர்ந்தன. பல லீக் தொடர்களால் இந்தியா திருவிழா போன்று விழாக்கோலம் பூண்டாலும் முரட்டுத்தனத்துக்கு பெயர் பெற்ற கபடிக்கு கொஞ்சம் மவுசு அதிகம்.  இதற்கு காரணம் ஐபிஎல் தொடர் இரண்டாவது சீசனில் தான் ரசிகர்களுக்கு அந்த தொடரின் தன்மை பற்றி தெரியும். ஆனால் புரோ கபடி லீக் தொடர் முதல் சீசனிலேயே ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புரோ கபடி தொடரின் 7-வது சீசன் ஹைதராபாத்தில் சனியன்று தொடங்குகிறது. தொடக்க நாளில் இரண்டு ஆட்டம் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி யு மும்பா அணியை  (இரவு 7:30 மணிக்கு) எதிர்கொள்கிறது. இரண்டாவது ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் அணியும், பாட்னா பைரட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 8:30 மணிக்கு ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

;