tamilnadu

அனந்தன் கால்வாயில் படித்துறையை இடித்து அத்துமீறல் ரியல் எஸ்டேட் உரிமையாளர் மீது மக்கள் பிரதிநிதிகள் புகார்

நாகர்கோவில், ஜுன் 17- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே அனந்தன் கால்வாய் படித்துறையை இடித்து இரவோடு இரவாக இருந்த இடம் தெரியாத அளவுக்கு சிமின்ட் கலவையால் மறைக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையின் கட்டுமானத்தை தகர்த்து சுயநலத்துக்காக நடந்துள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அத்துமீறல் குறித்து   நாகா்கோவில் பொதுபணிதுறை நீா்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளரை  சந் தித்து மக்கள் பிரதிநிதிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க தலைவர்கள் புகார்   அளித் தனர். இந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதா வது: கணியாகுளம் ஊராட்சி அனந்தன் கால் வாயில் பார்வதிபுரம்- ஆலம்பாறை சாலையை ஒட்டி இலந்தையடிக்கு செல்லும் சாலையின் வடக்குபக்கம் படித்துறை ஒன்று நீண்ட கால மாக இருந்து வருகிறது. இதனை அப்பகுதி யில் உள்ள ஆதி திராவிடமக்கள் உட்பட ஏரா ளமானோர் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர்.  

இந்த படித்துறையை கடந்த வெள்ளி யன்று (ஜுன் 12) அன்று  இரவு அருகில் உள்ள ரியல் எஸ்றேற்  உரிமையாளா்  சிமெண்ட்  கலவை  வைத்து முழுமையாக மூடிவிட்டார். ஞாயிறன்று காலை  இதை அப்புறப்படுத்த ஊர் மக்கள்  முயற்சித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த வசேரி காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுப்பணித் துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக தெரிவித்தனர். எனவே, படித்துறையை மூடியவா்மீது நடவடிக்கை எடுக்கவும் , உடனடி படித்துறை யை செப்பனிட்டுதரவும் கேட்டுக் கொள்வ தாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் சரவணன், ஒன்றியகுழு உறுப்பினர் உமா, கணியாகுளம் ஊராட்சி மன்ற உறுப்பினர் எஸ். டி .பிள்ளை, அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்க மாவட்ட தலைவர். என் எஸ் கண்ணன், செயலாளா் மலைவிளை பாசி, கணியாகுளம் இலந்தை யடி ஆதிதிராவிட மக்கள் உட்பட திரளா னோர் பொதுபணி துறை அதிகாரியிடம் மனு கொடுத்தனர்.

எஸ்.பியிடம் சிபிஎம் புகார்
பொதுப்பணித்துறை இடத்தை ஆக்கிர மித்துள்ள ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு சாதகமாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியும், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசியை அவமதிக்கும் நோக்கத்துடன் தாக்க முயன் றது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பா ளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

;