நவ.2இல் மாநில அளவிலான அறிவியல் தேர்வு மாணவர்களுக்கு அறிவியல் இயக்கம் அழைப்பு
நாகர்கோவில், செப்.22-மாநில அளவிலான அறிவியல் தேர்வு நவம்பர் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. மாணவ மாணவியர் பங்கேற்று பயன டையுமாறு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அழைப்பு விடுத் துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க குமரி மாவட்ட செயலாளர் டோமினிக்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஆண்டு தோறும் துளிர் திறனறிதல் தேர்வினை நடத்தி வரு கின்றது . இந்த ஆண்டு தொடக்க நிலை மாணவர்களாகிய 4 , 5 ஆம் வகுப்பு பயில்வோருக்கு ரூ.50 கட்டணத்தில் தேர்வு நடைபெறும். அவர்களுடைய வயதுக்கேற்ற வகையில் வினாக்கள் தயார் செய்து வழங்கப்படும். 6 , 7 , 8 ஆம் வகுப்புக் களை உள்ளடக்கிய இளநிலை மாணவர்கள் 9 , 10 வகுப்புக் களை உள்ளடக்கிய உயர்நிலை மாணவர்கள் 11 , 12 வகுப்புக் களை உள்ளடக்கிய மேல்நிலை மாணவர்கள் என்ற மூன்று பிரிவினர்களுக்கு ரூ.125 தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும். பதிவு செய்ய இறுதி நாள் அக்டோபர் 15 ஆகும். இதற்கான மாநில அளவிலான தேர்வு நவம்பர் 2 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறும். பங்கேற்கும் அனைவருக்கும் மாநில அளவில் பாராட்டு சான்றிதழ் மற்றும் ஒரு ஆண்டிற்கான துளிர் அறிவியல் மாத இதழ் அல்லது ஜந்தர்மந்தர் ஆங்கில அறிவியல் இரு மாத இதழ் பள்ளி முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மாநில அளவில் முதல் 10 இடங்களை பெறும் மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கும் அறிவியல் சுற்றுலா , விஞ்ஞானிகள் சந்திப்பு மற்றும் பாராட்டு கேடயம் வழங்கப்படும். 50 பதிவு களுக்கு மேல் செய்யும் பள்ளிகள் தேர்வு மையமாக செயல் படும். பள்ளிகள் பதிவு கட்டணத்தை வங்கிகள் வரைவோலை யாகவோ அல்லது பண பரிமாற்றம் மூலமாகவோ செலுத்த லாம் . இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பள்ளி மாணவர்களின் அறிவியல் திறன் மேம்படுத்தவும் , அறிவியல் இதழ்கள் வாசிக்கும் ஆர்வத்தை உருவாக்கி கொள்ளவும் ஆசிரியர்கள் துணைபுரியுமாறு கேட்டுக்கொள்கின்றேன் . மேலும் விப ரங்களுக்கு - தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலக தொடர்பு எண் - 04652 - 220960 , ஒருங்கிணைப்பாளர் - சசிகுமார் - 9443730961, மாவட்ட செயலாளர் - டோமினிக்ராஜ் - 9865304380 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
அணைகளில் நீர்மட்டம்
பெரியாறு- 127 அடி, நீர்வரத்து 550 கன அடி, திறப்பு 1600 கனஅடி. வைகை- 56.10 அடி, நீர்வரத்து 1003 கன அடி, திறப்பு 960 கன அடி. சோத்துப்பாறை- 85.28 அடி ,நீர்வரத்து 3 கன அடி , திறப்பு 3 கனஅடி. மஞ்சளாறு அணை- 35.20 அடி, நீர்வரத்து இல்லை . திறப்பு இல்லை. சண்முகா நதி அணை- 33.20 அடி, நீர்வரத்து இல்லை, திறப்பு இல்லை.