tamilnadu

img

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் மீன்துறை அதிகாரிகள் முறையாக கிடைக்காத நிவாரணம்; பரிதவிக்கும் மீனவர்கள் குமரி ஆட்சியரிடம் மீன் தொழிலாளர் சங்கம் மனு

நாகர்கோவில், ஜூன் 27- கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழி லாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சி யர் பிரசாந்த் வடநேரேவிடம் அளிக்க ப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதா வது: கன்னியாகுமரி மாவட்டத்தில் நீரோ டியிலிருந்து ஆரோக்கியபுரம் வரை  உள்ள மீனவ கிராமங்களில் மீனவ மக்கள் மீன்பிடி தொழிலை பாது காப்பான முறையில் செய்வதற்கு தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறை முகம், குளச்சல் மீன்பிடி துறைமுகம், முட்டம் மீன்பிடி துறைமுகம் மற்றும் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம் ஆகிய நான்கு மீன்பிடி துறை முகங்கள்  ஒதுக்கப்பட்டிருக்கின்றன.  இதை கண்காணிப்பதற்கு ஒவ்வொரு துறைமுகமும் ஒரு மீன்துறை  உதவி இயக்குனர் பொறுப்பில் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மீன்பிடி துறைமுகத்திலும் விசைப்ப டகுகள், வள்ளங்கள், கட்டுமரங்கள் தொழில் செய்வதற்கு வசதியாக தனித்த னியாக துறைமுகத்தினுள் இடம் பிரி க்கப்பட்டுள்ளது. அவ்வாறு பிரிக்க ப்பட்டாலும், பெரும்பாலான நேரங்க ளில் கட்டுமர வள்ளங்கள் கரையில் வரு வதற்கு வசதியாக மீனவர்கள் தங்களின்  ஊர்களில் வள்ளம் கட்டுமரங்களை நிறுத்துவது வழக்கமாக இருந்து வரு கிறது. ஆனால் இயற்கையின் சீற்றங்க ளின் காரணமாக குறிப்பாக புயல், கடல்  கொந்தளிப்பு காலங்களில் தங்களது  வள்ளங்களையும் பாதுகாப்பாக நிறுத்தி தொழில் செய்வதற்கு பல துறைமுகங்களில் அனுமதிக்கப்படு வதில்லை.

 இந்த விதிமீறல்களை சரி செய்து வசதி செய்து கொடுக்க வேண்டிய மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் தன் கடமையை சரியாக செய்வதில்லை. இதனால் அந்த தொ ழிலில் ஈடுபட்டுள்ள வள்ளம், கட்டுமரம் மீனவர்கள் பாதுகாப்பான முறையில் தொழில் செய்ய முடியாததுடன் தங்க ளுடைய மீன்பிடி சாதனங்களை இழப்ப தோடு பல சேதங்களை சந்தித்து வருகி றார்கள். இந்த நிலைமையை தவிர்க்க  மாவட்ட நிர்வாகமும், மீன் துறையும்  சரியான விதிமுறைகளை கண்டிப்பு டன் அமல்படுத்த வேண்டும். இது போன்ற அசம்பாவித நிலையை  தவிர்க்க அனைத்து சம்பந்தப்பட்ட  அதிகாரிகளும் கடமைப்பட்டிருக் கிறார்கள்.  மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 7,000 மீன்பிடி வள்ளங்கள் பதிவு செய்து மீன்பிடி தொழி லில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு தொழிலில் ஈடுபடுகின்ற வள்ளங்களை மீன்துறையினர் 3,000 வள்ளங்களை குறைத்து, சுமார் 4,000 வள்ளங்கள் மட்டும்தான் மீன்பிடி தொழிலில் ஈடு படுவதாக அரசுக்கு கணக்கு காட்டி வரு கின்றனர். குறைத்து காட்டியுள்ள 3000 வள்ளங்களுடைய நிலைமையை மீன்வ ளத்துறையினர் எவ்வாறு சரிகட்டி, அத னால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் மறைமுக மாக ஈடுபடுகின்றனர்.  இந்த 7000 வள்ளங்களுக்கு பதி லாக 4000 வள்ளங்களை காட்டி மண்ணெ ண்ணெய் வாங்கும் போது இதர 3000  பயனாளிகள் பயனடையாமல் பல சிர மங்களுக்கு ஆளாகின்றனர். இந்த மோச மான நிலைமையை மீன்துறையினர் தங்களின் அதிகாரத்தை தவறாக பயன்ப டுத்தி மீனவர்களை கஷ்டபடுத்தி வரு கின்றனர். இதை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதுடன், இதை நிவர்த்தி செய்ய மாவட்ட நிர்வா கத்திற்கும் மீன் துறைக்கும் அந்த பொறுப்பு உண்டு என சுட்டி காட்ட விரும்புகிறோம்.  அரசு விதிமுறைகளின்படி ஒரு  வள்ளத்திற்கு ஒரு மாதத்திற்கு சரா சரியாக 300 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும்.

ஆனால் மீன்துறை யினர் ஒரு வள்ளத்திற்கு 150 லிட்டர் முதல் 250 லிட்டர் வரை இடத்திற்கு தகுந்தாற்போல் விநியோகிக்கின்றனர். இவ்வாறு வழங்கும் மண்ணெ ண்ணெய்யை வைத்து மீன்பிடி தொழி லை அரசும் மக்களும் எதிர்பார்த்தது போல் மீன்பிடிக்க முடியாது என்பது மீன்துறைக்கு தெரிந்த ஒன்றே. அவ்வாறு மண்ணெண்ணெய் குறைத்து கொடுப்பதற்கு அரசு மீன்துறை கழக ங்களின் மூலம் விநியோகிக்கும் பல்க்குகளில் முறைகேடு நடக்கிறதா? இதற்கு மீன் துறையினர் சரியான நடவ டிக்கை எடுக்க வேண்டும். பதிவு  செய்யப்பட்ட அனைத்து வள்ளங்க ளுக்கும் குறைந்தது தலா 300 லிட்டர்  மண்ணெண்ணெய் வழங்க வேண்டு கிறோம்.   மீன்பிடி குறைவாக உள்ள கால த்தில் வழங்கப்படும் நிவாரண தொகைகள், மீன்பிடி தடைகாலத்திற்கு வழங்கப்படும் நிவாரணம், தேசிய மீனவர் சேமிப்பு திட்டம் மீனவர் பங்க ளிப்புடன் வழங்கப்படும் நிவாரண தொகை, மீனவர் நலவாரியத்தின் மூலம் வழங்கப்படும் கொரோனா தொற்று நோய் நிவாரண தொகை மேல் குறி ப்பிட்டுள்ள நான்கு நிவாரணங்களும் முறையாக எல்லா மீனவர்களுக்கும் கிடைக்கவில்லை.

கொரோனா நிவாரண நிதி உள்நாட்டு மீனவர்களுக்கு சரிவர கிடைக்கவில்லை. மொத்தத்தில் இந்த நிவாரணங்கள் கொடுக்க வேண்டிய பெயர் பட்டியலில், பழைய  பெயர் பட்டியலில் விடுபட்ட மீனவர்கள்  பெயர்கள் புதிய பெயர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. புதிய பட்டியலும் ஒழுங்காக தாயாரிக்கவில்லை. இவ்வாறு விடுபட்டு போகிறவர்களின் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. இவை மீன்வளத்துறையினருக்கு தெரி யாதது இல்லை. இது சரியான முறை யில் மீனவர்களை சென்றடைய மாவட்ட நிர்வாகமும், மீன் வளத்துறையும் வழி வகை செய்ய வேண்டும்.  கன்னியாகுமரி மாவட்டங்களில் செயல்படும் துறைமுகங்களில் தேங்கா ய்பட்டணம் துறைமுகம் மிகவும் முக்கிய மானது. இந்த துறைமுகம் இதர துறை முகங்களைப் போல் விற்கப்படும் மீன்களை வாங்குவதற்கு உள்ளூர் வியா பாரிகள், வெளியூர் வியாபாரிகள் என ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவ்வாறு வந்து போகின்ற வியா பாரிகளும், துறைமுகத்திற்கு அவசி யத்திற்கு வருகின்ற மக்களும் தனி மனித இடைவெளியை முறையாக கடை பிடிக்கவில்லை.

இந்த நிலையை கட்டுப்படுத்தி, கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதைபோல் இதர மீன்பிடி துறைமுகங்களையும் கவனிக்க வேண்டும். மேலும் தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள செய ல்பாட்டையும், உடமைகளையும் கவ னிப்பதற்கும், துறைமுகத்தில் வந்து போ கின்றவர்களை மேற்பார்வையிடவும், கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை போன்று மேற்குபகுதியிலும் புதிதாய் கண்கா ணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.  கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரையில் உள்ள சுமார் 8  ஊர்களை மையப்படுத்தி தூத்தூரில் மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. அவ்வாறு திறக்கப்பட்ட அலுவலகம் தேவை யான தளவாடங்கள், ஊழியர்கள் இல்லாமல், உதவி இயக்குநர் அலுவ லகம் என்ற பெயர் பலகையுடன் நிற்கிறது.

அதை அரசு எதிர்ப்பார்த்தது போல் செயல்படுத்துவதற்கு நிரந்தர உதவி இயக்குனர், தேவையான ஊழி யர்கள், தளவாடங்களுடன் செயல்ப டுத்த மாவட்ட நிர்வாகத்தையும், மீன்து றையையும் கேட்டுக் கொள்கிறோம். மேலும் தளவாடங்களுடன் கண்கா ணிப்பு கேமரா பொருத்தி செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை கன்னியா குமரி மாவட்ட மீன் தொழிலாளர்  சங்க மாவட்டத் தலைவர் கே.அலெ க்சாண்டர், பொதுச்செயலாளர் எஸ். அந்தோணி, பொருளாளர் டிக்கார்தூஸ்,  நிர்வாகிகள் செல்வராஜ், பிராங்கிளின் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளித்தனர்.

;