tamilnadu

img

சிறந்த எம்பியாக ‘திருமா’ முத்திரை பதிப்பார் சிதம்பரம் கூட்டத்தில் கே .பாலகிருஷ்ணன் புகழாரம்

சிதம்பரம், ஜூன் 11- சிதம்பரம் மக்களை தொகுதியில் திமுக தலைமையிலான மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  பானைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜனநாயகம் காத்து வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.  இதில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் பேசுகையில்,“ சிதம்பரம் மக்களவைத்  தொகுதியில் திருமாவளவன் வெற்றிபெறக் கூடாது என்பதற்காக சாதியை முன்னெ டுத்து அணித்திரட்டும் வேலையை செய்தது  பாமக. ஆனால், அனைத்து முயற்சிகளை யும் முறியடித்து திருமாவை வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு இந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் ” என்றார். மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி அதிகா ரம், பண பலத்தில் போட்டியிட்ட பாஜக, அதி முக கூட்டணியால் ஒரு இடத்தில் தான் வெற்றி  பெற முடிந்தது. மதச் சார்பற்ற அணிகள் ஒன்றி ணைந்து போராட்டத்தின் வாயிலாக மோடி அம்பலத்தை வெளிபடுத்தியதால் மெகா வெற்றி பெற்றது என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் எக்காலத்திலும் தாமரை மலராது, கருகி போய்விடும் என்பதை இந்த தேர்தல் மூலம் தமிழிசை அறிந்திருப்பார். அதே நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த ராமதாசின் சாதிய முகத்திரையை மக்கள் கிழிதெரிந்தது வரலாற்று சாதனை. சாதிய முரண்பாடுகளை  கலைந்து சகோ தரத்துவமாக இருப்பவர்களிடம் சாதி மோதலை உருவாக்கி குளிர்காய நினைத்த ராமதாசின் கனவு தவுடுபொடியாகிவிட்டது. அவதூறுகளை புறம் தள்ளி வெற்றி பெற்ற தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதி மக்களுக்கு மட்டுமல்ல நாட்டுமக்களின் குறை களை மக்களவையில் ஒலிக்க செய்து முத்திரை பதிப்பார் என்றும் கே. பாலகிருஷ்ணன் தெரி வித்தார். தொல். திருமாவளவன் பேசுகையில்,“ திமுக தலைமையிலான கூட்டணி கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் வெற்றி பெற  அரும்பாடுபட்ட அனைத்து கூட்டணி கட்சித்  தலைவர்களுக்கும் வாக்களித்த மக்களுக் கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். நான் சிதம்பரம் தொகுதி  மக்கள் மீது நம்பிக்கை வைத்தது வீண் போகவில்லை.  ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய மக்களவையில் குரல் கொடுப்பேன். சாய பட்டறை பிரச்சனை, சாலை பிரச்சனை உள் ளிட்ட அனைத்து மக்கள் பிரச்சனைகளும் நட வடிக்கை எடுக்கப்பேன் என்றும் கூறினார். இந்த கூட்டத்தில்  குமராட்சி திமுக ஒன்றி யச் செயலாளர் மாமல்லன், சிதம்பரம் நகரச் செயலாளர் செந்தில்குமார், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலார் முத்துபெருமாள், சிபிஎம் மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள்  ராமச்சந்திரன், எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்டக்  குழு உறுப்பினர்கள் வாஞ்சிநாதன்,ராஜா, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் நகர் பெரியசாமி, மதிமுக மாவட்டச் செயலா ளர் குணசேகரன், தமிழக வாழ்வுரிமை கட்சி யின் மாவட்டச் செயலாளர் முடிவண்ணன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இளங்கோ, கூட்டணி கட்சிகளை சார்ந்த மாவட்ட செயலாளர்கள் சவுகத் அலி, அப்துல்சுக்கூர் உள்ளிட்ட பலர் பேசினர்.