tamilnadu

ரூ.1 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்

கடலூர், ஜன. 25- கடலூர் முதுநகரில் தடை செய்யப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர். கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் எஸ்.சுகந்தன் தலைமையில், உணவு பாது காப்பு அலுவலர்கள் சந்திர சேகரன், பெ.நல்லதம்பி, க.சுப்பிரமணியன், எஸ்.ஏழுமலை, த.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் கடலூர் புதுநகர், திருப்பாதிரிபுலியூர் பான்பரிமார்க்கெட், முதுநகர் சிதம்பரம் சாலை, மணிக் கூண்டு பகுதிகளில் வெள்ளிக்கிழமையன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட னர். ஆய்வின் போது சுமார் 1 டன் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. முதுநகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட குழுவினர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சுமார் 50 கிலோ கைப்பற்றினர். அதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சமாகும். மேலும், ஆய்வின் போது கெட்டுப்போயிருந்த துவரம் பருப்பு, அரிசி ஆகியவை யும் பறிமுதல் செய்து அழித்த னர். உணவு பாதுகாப்புத் துறையின் விதிகளை மீறி உணவுப் பண்டங்களை விற்பனை செய்த 5 வியாபாரி களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதற்கு வியாபாரிகள் உரிய முறையில் விளக்கம் அளிக்காதபட்சத்தில் அவர்கள் மீது குற்ற வியல் நடவடிக்கை எடுக்கப் படுமென எச்சரித்தனர்.

;