tamilnadu

img

ஹைட்ரோ கார்பன் எடுக்க மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்: உ.வாசுகி

சிதம்பரம்,மே 22-ஹைட்ரோ கார்பன் அபாய எதிர்ப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பி. முட்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர்  டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஜி.மாதவன், மூசா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ராமச்சந்திரன், ஜி.ஆர். ரவிச்சந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் ஆர்.சதானந்தம் ப.வாஞ்சிநாதன், மூர்த்தி, தண்டபானி ஜெ. ராஜேஷ்கண்ணன், சிதம்பரம் நகரச் செயலாளர் எஸ்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த திட்டத்திற்கு எதிராக கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையிலும் கொண்டு வருவது கண்டிக்கத்தக்கது என்றும் இந்த திட்டத்தை அமல்படுத்தினால் மீனவ கிராமங்கள் அதிகமாக பாதிக்கப்படும்.சிப்காட், சைமா சாயக்கழிவு, நாகார்ஜூனா நிறுவனம், அனல்மின் நிலையம், இறால் பண்ணைகள், பெட்ரோ கெமிக்கல் மண்டலம் போன்றவைகளால் பேராபத்தை சந்தித்துக்கொண்டிருக்கும் சூழலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் கொண்டு வந்தால் விவசாயம், சுற்றுச் சூழல் பாதிப்பதோடு மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும். எனவே, முழுமையாக மக்களுக்கு விளக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை கேட்டு மக்கள் இயக்கம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.ஜூன் மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் இப்பகுதிகள் முழுவதும் நூற்றுகணக்கான கிராமங்களை சந்திக்கும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபடுவது எனவும் தீர்மானித்துள்ளனர்.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய உ.வாசுகி,“ புதிய புதிய தொழிற்சாலைகள் வருகின்ற போது அவை குறித்து அப்பகுதி மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவது தான் வழக்கம். ஆனால், வேதாந்தா நிறுவனம் தனக்கு இதிலிருந்து விலக்கு கேட்டிருக்கிறது. அதற்கு அனுமதிக்கக்கூடாது. கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்த வேண்டும்” என்றார்.

;