கடலூர், ஜூலை 6- என்எல்சியில் கொதி கலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந் துள்ளது. என்எல்சி நிறுவனத்தில் 2ஆவது அனல்மின் நிலை யத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஒப்பந்த தொழிலா ளர்கள் 6 பேர் சம்பவ இடத்தி லேயே கருகி பலியானார்கள். படுகாயமடைந்த 17 பேர் என்எல்சி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டனர். இவர்க ளில் நிறுவனத்தில் துணை தலைமை பொறியாளர் க. சிவக்குமார் கடந்த 3ஆம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் விருத்தா சலம் வட்டம் தொப்பிலி குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி செல்வ ராஜ் (51) ஞாயிற்றுக்கிழமை காலையிலும், நெய்வேலி வட்டம் 18, பாலம் தெருவைச் சேர்ந்த நிறுவனத்தின் இள நிலை பொறியாளர் ஜி. ரவிச்சந்திரன் (50) மாலையி லும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் திங்கள்கிழமை இன்கோசர்வ் தொழிலாளளி டி.இளங்கோ, பொறியாளர் ஏ.எம்.வைத்தியநாதன், பொறி யாளர் ஜோதிராமலிங்கம் ஆகியோர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. மேலும் சில ரது உடல்நிலை கவலைக்கிட மான நிலையில் உள்ளது என்று மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும் பத்தினருக்கு சிஐடியு சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.