tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டேன்! - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 'பெற்றோரை கொண்டாடுவோம்' நிகழ்ச்சியில், ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருத்தாச்சலம் அருகே இருக்கும் திருப்பெயரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்ற 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ரூ.10,000 கோடி கொடுத்தாலும் தேசியக் கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த விழாவில், 'அப்பா' என்ற புதிய செயலியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
மேலும் பேசிய முதல்வர், "தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருக்கிறது. இது 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காகச் செலவு செய்யவேண்டிய தொகை.
தேசிய கல்விக் கொள்கை என்பது சமூகநீதிக்கு, தமிழுக்கு, தமிழர்களுக்கு, தமிழ்நாட்டுக்கு வேட்டு வைக்கும் கொள்கை. நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு இது ஆபத்து. எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல. மொழியை திணிக்க நினைத்தால் எதிர்ப்போம். எங்கள் மொழியை அழிக்க ஆதிக்கம் செலுத்த நினைத்தால் விட மாட்டோம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.