சிதம்பரம், செப். 18- சிதம்பரம் நகரப் பகுதி களில் உள்ள குளம் மற்றும் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு மற்றும் வீடு களை அகற்றும் பணியில் சிதம்பரம் நகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஈடுபட்டு வருகிறார் கள். இந்த நடவடிக்கையில், 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த 500-க்கும் மேற் பட்ட வீடுகளை இடித்துள்ள னர். இதில், ஓமக்குளம் பகுதி யில் இருந்த 84 வீடுகளை திங்களன்று (செப்.16) இயந்திரம் மூலம் இடித்து தள்ளினார்கள். இதனால் இந்த பகுதியில் குடிசை வீட்டில் வாழ்ந்த மக்கள் மாற்று இடம் இல்லாமல் நடுத்தெருவுக்கு வந்துள்ள னர். மேலும் நகராட்சி சார்பில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் விரைவில் வீடு ஒதுக்குவதாக உறுதி பத்திரம் கொடுத் துள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் மூசா கூறுகை யில், “அந்த பகுதிகளில் குடி யிருந்த ஏழை மக்களுக்கு விரைவில் வீடு கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண் டும். ஒப்புதல் பத்திரம் கொடுத்துவிட்டோம் என்று நகராட்சி மற்றும் வரு வாய்த் துறை அதிகாரிகள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. இந்த பகுதியில் வசித்தவர்கள் வாடகை கொடுக்க முடியாத தினக் கூலி தொழிலாளர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு விரைவில் வீடு கிடைக்க நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.