tamilnadu

img

தலித் பெண் பாலியல் வல்லுறவு: குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தல்

கடலூர், அக். 4- நெய்வேலி அருகே தலித் விதவை  பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். சம்மந்தப்பட்ட குற்றவாளியை உடனே கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவா ரணம் வழங்க வேண்டும் எனவும்  மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இது குறித்து கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- நெய்வேலி அருகே கீழக்குப்பம் கிராமத்தைச் சார்ந்த திவ்யா (37)  தலித் சமூகத்தை சேர்ந்த விதவை.  துணிக் கடையில் வேலை பார்த்து வந்தார். வேலை வாங்கித் தருவதாக  கூறி வீட்டிற்கு அழைத்து வந்த நெய்வேலி அதிமுக நகரச் செயலா ளரும் முன்னாள் கங்கை கொண்டான் பேரூராட்சித் தலைவருமான மனோ கரன், பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதை வெளியே சொன்னால், உன்னையும் உன் குழந்தைகளையும் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.  கயவாளி மனோகரனின் மனைவி  துணிக் கடைக்கு சென்று திவ்யாவை  கொலை மிரட்டல் விடுத்ததோடு,  பொது இடத்தில் அசிங்கப்படுத்தி யுள்ளார். இதனால் மனமுடைந்த திவ்யா எலி மருந்தை (விஷம்) குடித்  துள்ளார். விழுப்புரம் முண்டியம்பாக் கம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இக்கொடூர செய்தியை அறிந்த  மார்க்சிஸ்ட் கட்சி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நிர்வாகி கள் நெய்வேலி மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட னர். அதன் பின்னரே குற்றவாளி மனோ கரன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. (பாதிக்கப்பட்ட பெண் வாக்கு மூலம் அடிப்படையில்). தலைமறைவாக இருக்கும் குற்றவாளி மனோகரனை உடனடியாக கைது செய்து சிறை யில் அடைக்க வேண்டும்.  பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு, குழந்தைகளுக்கு காவல்துறை உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இதர அமைப்புகளின் சார்பில் மந்தாரக்குப்பத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வி.மேரி தலைமை வகித்தார். மு. கந்தசாமி, வாஞ்சி நாதன், வி.சுப்புராயன், அசோகன்,  பிரகாஷ், திருஅரசு, பாலமுருகன், தண்டபாணி, மீனாட்சிநாதன், விசிக நெய்வேலி நகரச் செயலாளர் ஜோதி பாசு உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.

;