கடலூர், மார்ச் 3- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் கோ.ஆதனூர் கிராமத்தில் தெற்குப்பகுதியில் வசித்து வரும் ஆதிதிராவிட மக்களின் நீண்டகால கோரிக்கையான சாலை வசதி கேட்டு பலமுறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் கண்டுகொள்ளாததால் கோ.ஆதனூர் சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விருத்தாசலம் வட்டச் செயலாளர் என்.எஸ்.அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஏ.சந்திரசேகரன், வி.சிவஞானம், ஆர்.ஜீவானந்தம், கே.எம்.பரமகுரு, கே.அன்புச்செல்வி, ஆர்.கலைச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.