கடலூரில் கள்ளச்சாராயத்தை எதிர்த்து போராடியதற்காக படுகொலை செய்யப்பட்ட கடலூர் வாலிபர் சங்க தியாகிகள் குமார், ஆனந்தன் ஆகியோரின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் கடலூரில் அனுசரிக்கப்பட்டது. கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள அவர்களது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மலர் தூவி செவ்வணக்கம் செலுத்தி முழக்கமிட்டனர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத், நகர்க்குழு உறுப்பினர்கள் ஆனந்த், திருமுருகன், கிளைசெயலாளர் பூபதி, ஆர்.எம்.ரமேஷ், குமாரின் சகோதரர் மாரிமுத்து, பிரபு, ஆனந்தின் சகோதரர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.