tamilnadu

img

தேக்கமடைந்த கைத்தறித் துணிகளை அரசே கொள்முதல் செய்ய சிஐடியு வலியுறுத்தல்

கடலூர், ஆக. 13- கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள துணிகளை  தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறித்தி கைத்தறி நெசவு பாவு பட்டறை தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொற்று நோய் பொதுமுடக்கம் காரணமாக கைத்தறி தொழில் கடந்த 5 மாதத்திற்கு மேலாக முடங்கியுள்ளது. கூட்டுறவு சங்கங்களில் மற்றும் தனியார் நிறு வனங்களில் துணிகள் விற்பனை இல்லாமல் தேங்கி யுள்ளது. இதனால் அதனை நம்பியுள்ள கைத்தறி நெசவாளர்கள், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அரசு அறிவித்த நெசவாளர் நிவாரணம் 2,000 ரூபாய், பல்வேறு நிபந்தனைகளின் காரணமாக பெரும்பாலானவர்கள் பெற முடியவில்லை. கைத்தறி கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார் தறி உரிமையாளர்களிடம் தேங்கியுள்ள துணிகளைக் அரசே கொள்முதல் செய்து உடனுக்குடன் பணம் வழங்க வேண்டும், கொரோனா தொற்றால் பாதிக்  கப்படும் நெசவாளர்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை கிடைத்திட 5 லட்ச ரூபாய்க்கு சிறப்பு  மருத்துவக் காப்பீடு திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும். கைத்தறி நெசவாளர்களுக்கு தற்பொ ழுது பெற்றுவரும் கூலியை விட 40 விழுக்காடு கூலி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. தலைவர் ஆர்.ஆளவந்தார் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் எஸ். தட்சிணா மூர்த்தி, பொருளாளர் இ.தயாளன், சிஐடியு மாவட்டச்  செயலாளர் பி.கருப்பையன், துணைத் தலைவர் வி.சுப்புராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் கைத்தறி துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

;