கடலூர், பிப். 19- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள தெற்கிருப்பு காலனியைச் சேர்ந்தவர் தவிடன். இவரின் மகன் பழனிவேல் (28), கூலித்தொழிலாளி. கடந்த 12-2-2018 அன்று அதேப்பகுதியில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி பெற்றோரிடம் தெரி வித்துள்ளார். பின்னர் பெற்றோர் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கின் விசாரணை கடலூரிலுள்ள சிறார்க ளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கான (போக்ஸோ) சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.கருணாநிதி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பழனிவேலுக்கு 8 ஆண்டுகள் சிறைதண்ட னையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.