tamilnadu

கடலூர் மாவட்டத்தில் 16 இடங்களில் கொரோனா பரிசோதனை முகாம்

கடலூர், மார்ச் 18- கடலூர் மாவட்டத்தில் 16 இடங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித் துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் எம்.கீதா செய்தியாளர்களிடம் கூறிய தாவது:- கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கை யில் மாவட்ட நிர்வாகம் ஈடுப்பட்டு வருகிறது. இதன் படி மாவட்டத்தில் 16 இடங்க ளில் கொரோனா வைரஸ் பாதிப்பை பரிசோதிக்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவர், செவிலியர், மருந்தாளுநர், சுகாதார உதவியாளர் மற்றும் காவ லர் கொண்டகுழு அமைக் கப்பட்டுள்ளது.  சிதம்பரம் நடராஜர் கோயில், தில்லை காளி யம்மன் கோயில், திருப்பா திரிபுலியூர், கடலூர் முது நகர், விருத்தாசலம் ரயில் நிலையம், கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் பேருந்து நிலையங்கள் ஆகிய இடங்களில் மருத்து வக்குழு அமைக்கப்பட்டு ள்ளது. மேலும், காவல் துறையினரிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் படி ஆல்பேட்டை, வி.பி. நல்லூர், மேல்பட்டாம் பாக்கம், அழகியநத்தம், கண்டரக்கோட்டை, கும்தா மேடு, சாவடி, வான்பாக்கம் ஆகிய இடங்களிலும் பரி சோதனைக்குழு அமைக்கப் படும். இந்தகுழுவினர் வெளி மாநிலம், வெளிநாடுகளி லிருந்து வருவோரை பரிசோதித்து, அவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் கொரோனா வைரஸ் பரி சோதனைக்கு உட்படுத்து வார்கள். மேலும், பேருந்து, ரயில்களில் வருவோரையும் இக்குழுவினர் பரிசோதனை செய்வார்கள். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் இக்குழு செயல்படும்.
கண்காணிப்பு வளையத்திற்குள் 92 பேர்
ஜனவரி மாதம் முதல் பல்வேறு நாடுகளிலிருந்து கடலூர் மாவட்டத்திற்கு 108 பேர் வந்திருந்த நிலையில் செவ்வாயன்று 30 பேர் வந்திருந்தனர். இதில் 46 பேர் தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்கப்பட்ட நிலை யில் அவர்களுக்கு எந்தவித மான தொற்றும் இல்லை என தெரியவந்துள்ளது. மீதமுள்ள 92 பேர் தொடர்  கண்காணிப்பில் இருக்கி றார்கள். பரிசோதனை முடிவு கள் வந்தபிறகு இவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படு வார்கள்.

;