tamilnadu

கடலூரில் 12,580 பேர் அரசு பள்ளிகளில் சேர்ப்பு

கடலூர், ஆக. 22- கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 12,580 பேர் அரசு பள்ளிகளில்  சேர்ந்துள்ளனர். கொரோனா பொதுமுடக்கம் காரண மாக பள்ளிகள் செயல்படாத நிலை உள்ளது.  எனினும், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை நடத்தி அவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்க அரசு முடிவெடுத்து, ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் 1, 6, 9ஆம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்தது. பொதுமுடக்கத்தால் தொழில் பாதிக்கப்பட்டு பல்வேறு தரப்பினரும் தனியார்  பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, அவர்கள் அரசுப்பள்ளிக்கு வரும்போது எந்தவிதமான ஆவணங்க ளையும்கோராமல் சேர்க்கைக்கு முன்னு ரிமை அளிக்க வேண்டும் என அறிவு றுத்தப்பட்டது. அதன்படி, திங்கட்கிழமை முதலே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடலூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை மாண வர்கள் 6,244 பேர்,  மாணவிகள் 6,336 பேர் என மொத்தம் 12,580 பேர் சேர்ந்துள்ளனர்.  

அரசு துவக்க மற்றும் நடுநிலை பள்ளி கள் அளவில் தமிழ் வழிக்கல்வியில் பயில்வ தற்காக ஒன்றாம் வகுப்பில் 5,191 பேர் சேர்ந்துள்ளனர். 2ஆம் வகுப்பு முதல் 8ஆம்  வகுப்பு வரையில் 1,419 பேர் என  மொத்தம்  6,610 பேர்  சேர்ந்துள்ளனர். ஆங்கில வழிக் கல்வியில் ஒன்றாம் வகுப்பில் 967 பேரும், 2 முதல் 8ஆம் வகுப்பு வரை 248 பேர் என  மொத்தம் 1,215 பேர் சேர்ந்துள்ளனர். உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி களில் 6 முதல் 10ஆம் வகுப்பு வரை சேர்க்கை  நடைபெற்றதில் 4,755 பேர் சேர்ந்துள்ளனர்.  இதில், தமிழ் வழிக்கல்வியில் 6 ஆம் வகுப்பில் 1,999 பேர் சேர்ந்துள்ளனர். 7ஆம்  வகுப்பில் 42 பேரும், 8ஆம் வகுப்பில் 32 பேரும், 9 ஆம் வகுப்பில் 1,447 பேரும்,  10ஆம்  வகுப்பில் 3 பேரும் சேர்ந்துள்ளனர். ஆங்கில வழிக்கல்வியில் 6ஆம் வகுப்பில்  970 பேரும், 7ஆம் வகுப்பில் 60 பேரும், 8ஆம்  வகுப்பில் 45 பேரும், 9ஆம் வகுப்பில் 150  பேரும், 10ஆம்  வகுப்பில் 7 பேரும் சேர்ந்துள்ள னர்.  11 ஆம் வகுப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை வரும் 22ஆம் தேதி முதல் நடை பெற உள்ளது.

;