tamilnadu

img

அசாதாரணமான, ஒப்பற்ற வாழ்க்கை!

ஆலப்புழா, ஜுன் 22- ஒப்பிட முடியாத அனுபவங்களின் பின்னணியுடன் நமது சமூக வாழ்வுக்கு வழிகாட்டியாக முன்னுதாரணமானவர்  கவுரியம்மா. இவ்வளவு தீர்க்கமான - தீவிரமான அனுபவங்களை கொண்ட வேறு யாரும் கேரளத்தில் இல்லை. அந்த வகையில் மிகவும் உயர்வான – அசாதாரணமான – ஒப்பற்றதாக கவுரியம்மாவின் வாழ்க்கை உள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கவுரியம்மாவின் 101ஆவது பிறந்த நாள் விழா வெள்ளியன்று (ஜுன் 21) ஆலப்புழையில் நடந்தது. அப்போது பினராயி விஜயன் மேலும் கூறியதாவது: 

நவீன கேரள வரலாற்றோடு பிரிக்க முடியாத வகையில் பின்னிப் பிணைந் துள்ளது கவுரியம்மாவின் வாழ்க்கை. இவ்வாறு நாட்டுக்கும் மக்களுக்கும் வர லாறாக சொந்த வாழ்க்கையை மாற்றி யவர்கள் உலகில் அதிகமாக காணக்கி டைப்பதில்லை. அசாதாரணமான தைரி யமும் தியாகமும் அர்ப்பணிப்பும் சேவைத் திறனும் கொண்டது அவரது வாழ்க்கை. அதனால்தான் கவுரியம்மா வின் பிறந்தநாள் நாட்டுக்கும் மக்க ளுக்கும் உரிய கொண்டாட்டமாக மாறி யிருக்கிறது. அடுத்தவர் வாழ்வுக்கு உத வும்போதுதான் சொந்த வாழ்க்கை வெற்றிகரமாகிறது. இதை ஒரு விதி முறையாக கொண்டால் பெரும்பாலான மக்கள் அத்தகைய நிறைவான வாழ்க் கையை பெற்றிருக்க மாட்டார்கள். மாணவ பருவத்திலேயே பொது நலனுக்காக போராட்டக் களத்தில் இறங்கியவர். நூறு வயதைக் கடந்த நிலையிலும் கவுரியம்மா மக்களோடு இருக்கிறார். நீரில் மீன் என்பதுபோல் மக்களுக்கி டையே வாழ்கிறார் இன்றும் என்றும் கவுரியம்மா. 

கவுரியம்மா அரசியல் அதிகார அமைப்புகள் எதிலும் இல்லை. ஆனா லும் எந்த பிரச்சனையிலும் கவுரியம்மா வின் கருத்துகளை  அதிகாரத்தில் உள்ள வர்கள் காதுகொடுத்து கேட்கிறார்கள். அவரது கருத்தை பரிசீலித்து அமல் படுத்த முயற்சிக்கின்றனர். ஏனென் றால் கவுரியம்மா மக்களோடு தொடர்பு டைய எந்த பிரச்சனையிலும் கருத்து கூறும்போது அதில் ஒரு உண்மை இருக்கும். அனுபவத்தின் சத்தியம் இருக்கும். சமூக பிரச்சனைகளில் மக்க ளுக்கும் நாட்டுக்கும் நல்லதையே கவுரி யம்மா கூறுவார் என்பதால்தான். தேச விடுதலை இயக்கத்தை தற்கால அரசி யல் நிகழ்வுகளோடு இணைக்கும் அரி தான கண்ணிகளே இப்போது உள்ளன. அதில் விலைமதிப்பற்ற கண்ணி கவுரி யம்மா. அன்றைய அனுபவங்களை மன தில் கொண்டு எதிர்காலம் குறித்து கருத்து கூறுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சிறுவயதில் தன்னையே மறந்து சமூக சேவை செய்த வர் கவுரியம்மா. சமூக பொருளாதார நிலையில் முன்னேறிய குடும்ப பின்ன ணியில் பிறந்தவர். ஆனால் தனது தேவைகளை மட்டும் பார்த்தால் போது மானதல்ல என்று அவர் கருதினார். மற்ற வர்களும் மனிதர்களாக வாழும் நிலை ஏற்பட வேண்டும் என்பதில் உறுதி பூண்டார். 

பிறரைக்குறித்து பால்ய வயதில் அவர் கொண்ட உறுதியே அவரை மாண வர் இயக்கத்திற்கும் தொடர்ந்து கம்யூ னிஸ்ட் இயக்கத்திற்கும் கொண்டுவந்து சேர்த்தது. வீரத்தின் வடிவமாகவே என் றும் கவுரியம்மாவை கேரளம் பார்த்துள் ளது. சர்.சி.பி கால காவல்துறையின் கொடுமைகளை அனுபவித்தவர். அதன்பிறகு விடுதலை இந்தியாவிலும் காவல்துறையிடமிருந்து ஏராளம் கொடுமைகளை எதிர்கொண்டார். எதிர்த்து நின்றவர்களது வீரத்தின் அடை யாளமாக கவுரியம்மா மாறினார். அந்த வகையில் அவரைக்குறித்த கவிதை கள்கூட மலையாளத்தில் படைக்கப்பட் டன. குறைந்த எண்ணிக்கையிலான பெண்கள் மட்டுமே கல்வி அறிவு பெற் றிருந்த காலகட்டத்தில் சட்டப்படிப்பு முடித்தவர் கவுரியம்மா. அவர் நினைத்தி ருந்தால் உன்னத நிலைக்கு சென்று சொந்த வாழ்க்கையை வளமாகவும் வசதி படைத்ததாகவும் மாற்றியிருக்க முடியும். ஆனால் அதுவல்ல தனது வழியென அவர் அறிந்திருந்தார். அவர் மக்களிடம் சென்றார். தலைமறை விலும் சிறையிலுமாக அவர் தியா கப்பூர்வமாக வாழ்ந்தார். 

முதலாவது கேரள அமைச்சரவை யில் அவர் இடம்பெற்றார். கேரள நில சீர்திருத்தம் உள்ளிட்ட சமூக மாற்றத் திற்கு வி்த்திட்ட சட்டங்களை நிறை வேற்றுவதில் முக்கிய பங்கு வகித்தார். இம்எஸ் இரண்டாவது அமைச்சரவை யிலும் நாயனாரின் இரண்டு அமைச்ச ரவைகளிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தார்.  கெடு நிகழ்வாக, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அடையாளமாக விளங் கிய கவுரியம்மா கட்சியைவிட்டு வெளி யேறும் துயரநிலை ஏற்பட்டது. ஜனா திபத்ய சம்ரக்சண சமிதி (ஜனநாயக பாது காப்பு இயக்கம்) துவக்கியதும் பின்னர் ஏ.கே.அந்தோணியின் இரண்டாவது அமைச்சரவையிலும் உம்மன்சாண்டி யின் முதலாவது அமைச்சரவையிலும் இடம் பெற்றதை கேரளம் கண்டது. அந்த அரசியல் மாற்றம் கவுரியம்மாவை நேசித்த அனைவரையும் வேதனைக் குள்ளாக்கியது. எதுவானாலும் சமீப காலத்தில் கவுரியம்மா மீண்டும் கட்சி யுடன் ஒத்துழைக்கும் நிலைபாட்டுக்கு வந்தார். அது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும்  இடதுசாரிகளையும் விரும் பும் முற்போக்கு சமூக சக்திகளுக்கு மகிழ்ச்சியை தந்தது. 

தீர்மானகரமான காலகட்டங்களில் எல்லாம் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை கவுரி யம்மா வழங்கியுள்ளார். வலதுசாரி திரிபுக்கு எதிராகவும் இடது தீவிர வாதத்துக்கு எதிராகவும் போராடி கட்சி யை சரியான கொள்கை வழியில் நிலை நிறுத்த அவர் அரும்பணியாற்றினார். தனிப்பட்ட இழப்புகளைக்கூட அவர் சந்திக்க நேர்ந்தது. அந்த நேரத்தில் கட்சி யுடன் கொண்டிருந்த பற்றால் அதை அவர் பொருட்படுத்தவில்லை.  சட்டமன்ற உறுப்பினராக-அமைச்ச ராக நீண்டகாலம் பணியாற்றியபோதி லும் அவர் சாதாரண வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார். 1952-53, 1954-56 காலகட்டங்களில் திரு-கொச்சி சட்ட மன்றங்களிலும் கேரளம் உருவான பிறகு ஐந்தாவது சட்டமன்றம் தவிர ஒன்று முதல் பதினொன்று வரையுள்ள சட்டமன்றங்களிலும் அவர் இடம்பெற்றி ருந்தார். அமைச்சரவைகளில் வரு வாய், தொழில், வேளாண்மை, சுங்கம், உணவு உள்ளிட்ட துறைகளில் அடிப்ப டையான மாற்றங்களை ஏற்படுத்தவும் தனக்கே உரித்தான திட்டங்களை அமல்படுத்தினார். 

மக்களுக்கு உதவும் அனைத்தும் அவருக்கு ஏற்புடையதே. மக்கள் நலன் சார்ந்தவற்றை அமல்படுத்துவதில் அதிகார வர்க்க மேதாவித்தனமோ, சிவப்புநாடா வழக்கங்களோ தடை யாக இருப்பதை அவர் அனுமதித்த தில்லை. அநீதிகளோடு சமரசம் செய்து கொள்ளாததால் பல்வேறு நேரங்களில் அவரை சர்வாதிகாரியாக பலரும் கருதி னர். ஆனால் நாட்டுநலன், மக்கள் நலன் மட்டுமே கவுரியம்மாவின் மனதில் உள் ளது. அதற்காகவே அவர் அவ்வாறு நடந்துகொள்கிறார் என்பதை அவர்கள் அறிவார்கள்.  நாயனார் அமைச்சரவை யில் தொழில் வளர்ச்சிக்கு புதிய முயற்சி களை மேற்கொள்ள அவரால் முடிந்தது. இவ்வாறு பல வகையிலும் வரலாற்றின் பகுதியாக தனித்துவத்துடன் கவுரி யம்மா மக்கள் மனங்களில் பதிந்துள்ளார்.  

துயரத்தின் கண்ணாடி 
 

பி.கிருஷ்ணபிள்ளை, இஎம்எஸ், ஏகேஜி போன்ற முதல் தலைமுறை கம்யூ னிஸ்ட் தலைவர்களுக்கு இணையாக கவுரியம்மா செயல்பட்டுள்ளார். அந்த வகையில் கேரள கம்யூனிஸ்ட் இயக்கம் வலுப்படுவதில் பெரும் பங்களிப்பை கவுரியம்மா செய்துள்ளார். பெண்க ளுக்கு சொந்த முகமும், தனித்துவ மும் உண்டு என கேரள சமூகத்திற்கு போராட்டங்களின் மூலம் நிறுவியவர் கவுரியம்மா. அதற்கு தேவையான சக்தி யை கம்யூனிஸ்ட் இயக்கம் அவருக்கு அளித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் அரசி யல் பார்வையே அவரை மன்ன ராட்சிக்கும் திவான் ஆட்சிக்கும் ஆங்கி லேய ஏகாதிபத்தியத்துக்கும் எதிராகவும் அணி வகுக்கச் செய்தது. அதே கட்சி நிலைபாடுதான் அவரை நில உறவு சட்டத்திற்கும் நில வெளியேற்ற தடுப்பு சட்டத்திற்கும்  இட்டுச்சென்றது. கோப்பு களை பார்ப்பது தொழில்நுட்பத்தின் கண்ணாடி மூலம் அல்ல. மாறாக மக்க ளது வாழ்க்கை துயரத்தின் கண்ணாடி மூலமாக என்பதை அவர் கற்பித்தார். 

பி.கிருஷ்ணபிள்ளை உள்ளிட்டோ ரது தலைமறைவு வாழ்க்கையின் புகலி டமாக கவுரியம்மாவின் வீடு விளங்கி யது. திவான் ஆட்சிக்கு எதிராக போரா டிய கவுரியம்மாவை அதிலிருந்து விலக்கி நிறுத்த சர்.சி.பி நீதிபதி பதவி தர முன்வந்ததும் கவுரியம்மா அதை நிரா கரித்ததும் வரலாற்றின் பக்கங்கள். எந்த அளவுக்கு பணமும் அதிகாரமும் மகிமை யும் அளிக்கும் பதவியை கவுரியம்மா நிராகரித்தார் என்பதை நினைவுகூர வேண்டும்.  நீதிபதி பதவியை ஏற்று சர். சி.பியின் நியாயத்தை காப்பவராக அல்ல மாறாக அவரது சிறைக்கதவு களில் அடைபடும் குற்றவாளியாவதே கவுரியம்மாவின் விருப்பமாக இருந்தது. 

சங்ஙப்புழ ரமணன் கேரளம் முழு வதும் புகழ்பெற்ற பாடகராக விளங்கி யபோது மகாராஜாஸ் கல்லூரியில் அவ ருடன் இணையாக பாடியவர் கவுரி யம்மா. அசாதாரணமான தியாகமும் வீர மும் நிறைந்த வாழ்க்கைக்கு சொந்த மானவர் அவர். அவையெல்லாம் இந்த சமூகத்தை முற்போக்காகவும் மனிதா பிமானத்துடனும் மாற்றுவதற்காகவே. அவரது பிறந்தநாளில் சமூகத்தை இனியும் முன்னோக்கி கொண்டு செல்ல மறுமலர்ச்சிக்கான நகர்வு களை வலுப்படுத்தி முன்னேற சபத மேற்போம். அதுதான் கவுரியம்மா வுக்கு நாம் கூறும் பிறந்தநாள் வாழ்த்து என முதல்வர் பினராயி விஜயன் பேசி னார்.