tamilnadu

img

மூத்த தோழர் எஸ்.மொக்கராஜ் காலமானார்

தேனி ,ஜன.23- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேனி மாவட்ட மூத்த தோழர் எஸ்.மொக்கராஜ் (67 )வியாழனன்று காலை கூடலூரில் உள்ள அவரது இல்லத்தில்  காலமானார் .  அகில இந்திய விவசாயத்தொழி லாளர் சங்க தேனி மாவட்டத்தலை வரும்,  ஒன்றாயிருந்த மதுரை மாவட்டத் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த எஸ்.மொக்கராஜ் கட்சியின்  முழுநேர ஊழியராக நீண்ட காலம் பொறுப்பு வகித்துள்ளார்.

விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் அகில இந்தியக் கவுன்சில் உறுப்பினர், மாநிலத் துணைத்தலை வர், தேனி மாவட்டம் பிரிவதற்கு முன்பாக ஒன்றாயிருந்த மதுரை மாவட்டத்தின் தலைவர், கட்சியின் மதுரை புறநகர் மாவட்டக்குழு உறுப் பினர்  பொறுப்புகளை வகித்துள்ளார். மதுரையிலிருந்து தேனி தனி மாவட்டமாக உருவானபின் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் தேனி மாவட்டச் செயலாளர்,  கட்சியின்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டத் தலைவர்  உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை ஏற்று திறம்பட பணியாற்றியவர் ஆவார்.  உடல்நிலை கடுமையாக பாதிக்கப் பட்ட நிலையிலும் ஏற்றுக்கொண்ட பணி களை சிறப்பாக நிறைவேற்றினார் .இவருக்கு விஜயா என்ற மனைவியும், விமொசினி என்ற மகளும் உள்ளனர்.  விஜயா கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராக இருந்து தொழிற்சங்க அரங்கில் பணியாற்றி வருகிறார். 

கம்பம் பகுதிகளில்  1980- ஆம் ஆண்டு நடவு கூலி உயர்வு கேட்டு கூலித்தொழிலாளிகள்  மூன்றா யிரத்திற்கும் அதிகமானோரைத் திரட்டி  போராட்டம் நடத்தியவர் மறைந்த தோழர் மொக்கராஜ்.  இந்த போராட்டத் தையடுத்து நிலச்சுவான்தார்கள் அவர்களாகவே கூலியை உயர்ந்த வேண்டி வந்தது . க.புதுப்பட்டியில் கூலி உயர்வு கேட்டு போராடியதால் தோழர் மொக்கராஜ், பி.கே.முத்துசாமி ஆகியோரை நிலச்சுவான் தாரர்கள் கடுமையாகத் தாக்கினர் . தொழி லாளர்கள் திரள்வதை அறிந்த அவர்கள் தப்பிவிட்டனர் . வனத்துறை அலுவலர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் எஸ்.மொக்க ராஜ் குற்றவாளி யாக சேர்க்கப்பட்டு பொய் வழக்கு பதிவுசெய்யப் பட்டது.இதனால் அவர் ஓராண்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார் .பின்னர் இவரை நிரபராதி என நீதிமன்றம் விடுதலை செய்தது. மக்கள் பிரச்சனைக்காக பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கி சிறை சென்றுள்ளார். மொக்கராஜின் மறைவுச் செய்தி யறிந்து கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன், தேனி மாவட்டச் செய லாளர் டி.வெங்கடேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எல். ஆர்.சங்கரசுப்பு, ஏ.வி.அண்ணா மலை, ஜி.எம்.நாகராஜன் உள்ளிட்ட தலைவர்கள் அன்னாரது உட லுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி வெள்ளிக் கிழமை பகல் ஒரு மணியளவில் கூடலூரில் நடைபெறுகிறது. 

கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

தோழர் மொக்கராஜ் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் இரங்கல் தெரி வித்துள்ளார்.
 

 

;