சென்னை, மே 3- எப்,சிஏ இந்தியா நிறுவனம் சென்னை, மும்பையில் உதவி தேவைப்ப டும் குடும்பங்கள் மற்றும் மூத்த குடி மக்களுக்கு ஒரு மாத காலத்திற்கான உலர் உணவு, சுகாதார அத்தியாவசியங்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகர ணங்களை வழங்கவுள்ளது.
வாலண்டரி ஹெல்த் சர்வீசஸ் (விஎச்எஸ்) வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான 42 படுக்கைகள் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளது. எப்.சி.ஏ இந்தியா ஊழி யர்கள் தங்களது நிறுவனம் தவிர தங்க ளால் ஆன உதவியையும் வழங்க உள்ள தாக நிறுவனத்தின் தலைவரும்,நிர்வாக இயக்குநருமான டாக்டர் பார்த்தா தத்தா கூறியுள்ளார்.