tamilnadu

img

பிரேசில் ஜனாதிபதி வருகைக்கு கரும்பு விவசாயிகள் எதிர்ப்பு

சென்னை,ஜன.22- உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு  மாறாக இந்திய அரசு கரும்பு விவசாயி களுக்கு மானியங்களையும் சலுகைகளை யும் வழங்குவதாக குற்றம் சாட்டி இந்தியா வுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தொடுத்துள்ள பிரேசில் அதிபர் ஜன வரி 26 ஆம் தேதி நடக்கும் இந்திய குடியரசு  தின விழாவில் பங்கேற்க மோடி தலைமை யிலான மத்திய பாஜக அரசு அழைத்துள் ளதை அகில இந்திய கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு கண்டித்துள்ளது. மேலும், பிரே சில் ஜனாதிபதி போல்சனாரோவுக்கான அழைப்பை திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பின் அகில இந்தியத் தலைவர் டி.ரவீந்திரன், பொதுச் செயலாளர் என்.கே.சுக்லா ஆகியோர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:- பிரேசில் நாட்டில் தீவிர வலதுசாரி சித்தாந்  தத்தை கடைபிடிக்கும் போல்சனாரோவை எதிர்த்து அவரது சொந்த நாட்டிலேயே தொழி லாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் பழங்குடி மக்கள் போராடி வருகிறார்கள்.

நரேந்திரமோடியை போலவே கார்ப்ப ரேட் ஆதரவு கொள்கைகளை ஆட்சி அதி காரத்தில் தீவிரமாக செயல்படுத்துபவர் போல்சனாரோ. அமேசான் காடுகளின் வளங்களை கார்ப்பரேட் டுகள்  கொள்ளை அடிக்க வாயில்களை திறப்பது உட்பட பிரேசி லில் போல்சனாரோ சுரண்டல் கொள்கை களை அமல்படுத்துகிறார். உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறியதாகக் குற்றம் சாட்டி கரும்பு விவசாயி களுக்கு இந்திய அரசு அதிக அளவில் மானி யங்கள் வழங்குவதாக பிரேசில் அரசு  சர்வ தேச அளவில் சவால் விடுத்துள்ளது. இதே  போல அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக  இந்திய அரசு விவசாயிகளுக்கு மானியங்கள்  அளிப்பதாக ஆஸ்திரேலியா, குவாதிமலா நாடுகளும் சர்வதேச அளவில் எதிர்த்துள்ள னர். இதன் மூலம் இந்திய விவசாயிகள் நேரடி யாக அச்சுறுத்தப் படுகிறார்கள் குறிப்பாக உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு எதிரான பிரேசில்  நடவடிக்கைகளால் இந்தி யாவில் கரும்பு விவசாயிகள் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.

பிரேசில் இந்தியாவுக்கு எதிராக சவால்  விடுவது மற்றும் உலக வர்த்தக அமைப்பு நிர்பந்திப்பதால் ஏற்படும் சர்க்கரை வர்த்தக போட்டியால் சுரண்டப்படுவதிலிருந்து விவ சாயிகளை பாதுகாக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. பிரேசில் எழுப்பியுள்ள சர்ச்சைகளில் இந்தியா தோல்வியுற்றால் வேளாண்மை தொடர்பான ஒப்பந்தங்கள் அனைத்தையும் இந்தியா மாற்றியமைக்க வேண்டும். சர்வ தேச நிர்பந்தங்களால் இந்திய சர்க்கரை துறை பாதித்தால் 5 கோடிக்கும் அதிக மான விவசாயிகள் மற்றும் 5 லட்சத்திற்கும்  அதிகமான சர்க்கரை ஆலை தொழிலா ளர்கள் பாதிப்பார்கள். மோடி தலைமையிலான பாஜக அரசு இந்திய விவசாயிகளை பாதுகாப்பதற்கு பதி லாக நமது நாட்டின் கரும்பு விவசாயி களை அழிக்க முயற்சிக்கும் பிரேசில் நாட்டின்  அதிபரை சிவப்பு கம்பளம் விரித்து வர வேற்கிறது. இதை கண்டித்தும் இந்திய விவ சாயிகளுக்கு எதிரான பிரேசில் அதிபரே திரும்பிப் போ என கருப்புக் கொடிகளுடன் நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டங்களை  நடத்துமாறு மாநில அமைப்புகளை அகில இந்திய கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.  இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.

;