tamilnadu

img

புத்தகத்திற்கு மாற்று வேறு இல்லை

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஒரு லட்சமாவது பிரதியை வெளியிட்டு சீத்தாராம் யெச்சூரி பேச்சு

சென்னை,ஜன.20- மின்னணு ஊடகங்கள், மின்னணு புத்தகங்கள் என்று புதிய தொழில்நுட்ப ஏற்பாடுகள் வளர்ந்திருந்தாலும், அச்சிடப்பட்ட புத்தகத்திற்கு மாற்று வேறு எதுவும் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார். சென்னையில் பாரதி புத்தகாலயம் சார்பில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை யின் ஒரு லட்சமாவது பிரதி வெளி யீட்டு விழா சென்னை புத்தக காட்சியில் திங்களன்று (ஜன.20) நடைபெற் றது. இதில் அவர், ஒரு லட்ச மாவது பிரதி யை வெளியிட்டுப் பேசியதாவது:

43வது ஆண்டாகச் சென்னை புத்தகக் காட்சி நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாள்தோறும் ஏராளமான புத்தக ஆர்வலர்களும் இலக்கிய ஆர்வலர்களும் இந்த புத்தக காட்சிக்கு வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் சென்றது நல்ல விஷயமாகும்.  இன்றைய தலைமுறைக்குக் கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகள்  என்னைப்போன்ற தலைமுறை யினருக்குக் கிடைக்கவில்லை.  இன்றைய தலைமுறையினர் இன்டர்நெட் மூலமாகத் தகவல் களைத் தேடி தங்களது அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள். புதிய  தகவல்களைத் தெரிந்துகொள் கிறார்கள். தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும் புத்தகங்கள் அச்சிடுவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. குறைய வில்லை. எந்த ஒரு தொழில்நுட்பமும் அச்சுத் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக இருக்கமுடியாது. புத்தகத்திற்கு மாற்று வேறு ஒன்று இருக்கமுடியாது.

மின்னணு முறையிலான புத்தகங்கள் இருந்தாலும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கு மாற்று எதுவும் இல்லை. புத்தகம் புத்தகம்தான். இலக்கியம் இலக்கியமாகத்தான் இருக்கும். மனித குல அனுபவத்தில் புத்தகம் ஒரு சிறந்த சாதனமாகும். நாவல் கள், கதைகளில் உள்ள உணர்ச்சி களையும் எழுத்தாளரின் அழகிய நடையையும் புத்தகங்களைப் படிப்ப தன் வாயிலாகத்தான் உணர முடி யும். புத்தகங்களைப் படிக்காதவர்கள் இத்தகைய உணர்வுகளைப் பெற்றி ருக்க முடியாது. மனிதகுலத்திற்கு சிறந்த நண்பனாகப் புத்தகங்கள் திகழ்கின்றன. இந்த தருணத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஒருலட்சமாவது பிரதியை வெளியிடுவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.  இன்றைய நவீன உலகில் தமிழ்மொழியில் கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை ஒருலட்சம் பிரதி கள் விற்றிருப்பது மிகப்பெரிய சாதனை யாகும்.  அடுத்த ஒரு லட்சம் புத்தக விற்பனைக்காக அச்சிட இருப்பது நல்ல அறிகுறியாகும். இந்த சாதனையை நிகழ்த்திய பாரதி புத்தகாலயத்தை பாராட்டுகிறேன். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.  இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், மார்க்சிய ஆய்வாளர்  மு.சிவலிங்கம், சிபிஎம் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், சிஐடியு மாநிலத் தலைவர்  அ.சவுந்தரராசன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க பொதுச் செயலாளர் பெ.சண் முகம். பாரதி புத்தகாலய நிர்வாகி நாகராஜன், சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

;