சென்னை, அக். 18- மண்டல இணைப்பதிவாளர் கள் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் கூட்டுறவு சார் பதிவாளர்களை மண்டல மாறுத லுக்கு பரிந்துரை செய்வதை பதி வாளர் ஆய்வுக்கு உட்படுத்தி நிராகரிக்க வேண்டும் உள்ளிட்ட 33 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுற வுத் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத் தில் உள்ள பதிவாளர் அலுவல கம் முன்பு பெருந்திரள் முறையீடு தலைவர் எம்.சவுந்தரராஜன் தலைமையில் வெள்ளியன்று (அக். 18) நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் வெ.செல்லையா கோரிக்கை களை விளக்கிப் பேசினார். அரசு ஊழியர் சங்க தென்சென்னை மாவட்டத் தலைவர் டேனியல் ஜெயசிங் முன்னாள் மாநிலத் தலைவர் என்.இளங்கோ, முன் னாள் பொதுச் செயலாளர் ஆ.ரத்தினம், முன்னாள் பொரு ளாளர் எஸ்.எஸ்.சலீம் ஆகி யோர் வாழ்த்திப் பேசினர். அரசு ஊழியர் சங்க மாநிலத் தலை வர் மு.அன்பரசு போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். மாநில பொருளாளர் ஆர்.பட்டாபிராமன் நன்றி கூறினார்.முன்னதாக மாநில துணைத் தலைவர் சோ.பத்மா வரவேற் றார். இதில் மாநிலம் முழுவதி லும் இருந்து நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து எம்.சவுந்தர ராஜன் கூறுகையில், 1.10. 2017ஆம் ஆண்டு தேதிய துணைப் பதிவாளர் பதவி உயர்வு பட்டியலில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அனை வருக்கும் காலதாமதமின்றி பணி இட ஆணைகள் வழங்க வேண்டும். கூட்டுறவுத் துறை யில் 28 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும் துணைப் பதி வாளராக 38 பேருக்கு பதவி உயர்வு வழங்காமல் காலதா மதம் செய்து வருகிறார்கள். இள நிலை ஆய்வாளரில் இருந்து முதுநிலை ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கும் போது தகுதி யுடைய 36 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. பத்திரப் பதிவாளரில் இருந்து இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்கப்படும் போது, சொந்த மண்டலங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்பா மல் 350 கி.மீ தூரத்தில் பணியிடம் வழங்கப்படுகிறது. எனவே அந்தந்த மண்டலங்களிலேயே பணியிடம் வழங்க வேண்டும். மண்டல இணைப்பதிவாளர்கள் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் நிர்வாக கார ணம் எனக் கூறி கூட்டுறவு சார்பதி வாளர்களை மண்டல மாறுதல் என்ற பெயரில் தொலைதூர மாவட்டங்களுக்கு மாற்று கிறார்கள். எனவே அதை பதி வாளர் ஆய்வுக்கு உட்படுத்தி நிராகரிக்க வேண்டும்.
இளநிலை உதவியாளரில் இருந்து இளநிலை ஆய்வாளர், முதுநிலை ஆய்வாளர்களில் இருந்து கூட்டுறவு சார்பதிவாளர் பதவி உயர்வு பட்டியல்களை உடனே வெளியிட வேண்டும். 3 நிலைகளில் உள்ள சுருக் கெழுத்து தட்டச்சர்கள் 22 பேருக்கு கடந்த 20 ஆண்டுகால மாக பதவி உயர்வு வழங்காமல் உள்ளது. ஒருமுறை அவர்க ளுக்கு விதிகளை தளர்த்தி இள நிலை ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். மண்டல ஒதுக்கீடு, மண்டல மறு ஒதுக்கீடு ஆணைகள் கூட மாத கணக்கில் காலதாமதமாக வழங்கப்படுகிறது என்றார். இதற்கிடையே மாநிலத் தலைவர் எம்.சவுந்தரராஜன் தலைமையில் மாநில நிர்வாகி கள் வெ.செல்லையா, கே.எஸ்.மாரியப்பன், பா.சிவக்குமார், தி.க.ராமசாமி, க.பிச்சைவேலு, என்.வேலாயுதம், செபஸ்டியன், கோ.பழனியம்மாள், த.ராம கிருட்டிணன், ச.பாலகிருஷ் ணன், ஆர்.நவநீதகிருஷ்ணன், வினோத்ராஜா, ச.செல்வி ஆகி யோர் மாநில பதிவாளர் கோவிந்தராஜை சந்தித்து கோரிக்கை அடங்கிய மனுவை அளித்து பேச்சுநடத்தி னர். மனுவை பெற்றுக் கொண்ட பதிவாளர் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ள தாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.