tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு... அரசியல் நையாண்டி

பிரதமர் மோடி :- அரசியல் சட்டம் நமக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு.
ச.சா - அப்புறம் எதுக்கு அத அணைக்க முயற்சி பண்றீங்க..??
*****
பாஜக எம்.பி. சுப்பிரமணியம் சுவாமி :- ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை 2 ஆண்டுகளுக்கு மூட வேண்டும்.
ச.சா - ஏன்.. அந்த மாணவர்கள் நியாயத்துக்காக விடாம போராடுறாங்களோ..??
*****
உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு:- உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில்தான் தேர்தல் நடவடிக்கைகள்.
ச.சா - நடத்தாம இருக்குறதுக்குதான நேரடி தேர்தல ரத்து பண்ணிருக்கீங்க..!!?
*****
செய்தி :- மோப்ப நாய்க்கு விருது வழங்கிக் கவுரவித்தார், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்.
ச.சா - இவரோட தில்லுமுல்லுகள “மோப்பம்”பிடிச்ச  அதிகாரிகள்லாம் குலைநடுங்கிப் போய் இருக்காங்களாமே..??

;