சென்னை,மார்ச் 20- கொரோனா முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக தமிழக சட்டமன்ற கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. தமிழக சட்டப்பேரவை யில் வெள்ளிக்கிழமை(மார்ச் 19) கேள்வி நேரம் முடிந்தவு டன் கவன ஈர்ப்பு தீர்மா னத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்,“ நாளுக்கு நாள் கொரோனா தீவிரம் குறித்து பல்வேறு தக வல்கள் வெளியாகிக் கொண்டி ருக்கின்றன. அதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் கார ணமாக பல்வேறு மாநி லங்களில் சட்டமன்றக் கூட்டம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளது” என்றார்.
கூட்டங்கள் நடத்த வேண்டாம். கூட்டத்திற்கு செல்ல வேண்டாம் என்று அரசு சார்பில் வலியுறுத்தப் பட்டுள்ளது. மக்களிடம் இதை சொல்லும் நாமே சட்ட மன்றத்தில் கூடுவது சரியா? என்பதை சிந்திக்க வேண் டும். மக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படும் வகையில் நாமும் அதை பரிசீலிக்க வேண்டும் என்றும் மூத்த அமைச்சர் ஒருவர் தனது வீட்டு வாயிலில் தன்னை பார்க்க யாரும் வரவேண் டாம். சென்னைக்கு வந்தும் சந்திக்க வேண்டாம் என்று எழுதி வைத்திருக்கிறார். இதுவும் விழிப்புணர்வு நடவடிக்கைதான். எனவே சட்டமன்ற கூட்டத்தை ஒத்தி வைத்து மக்களுக்கு பீதி ஏற்படாமல் தடுக்க வேண்டி யது நமது பொறுப்பு. இது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் காலகட்டங்க ளில் சட்டமன்ற உறுப்பி னர்கள் அந்தந்த தொகுதியில் இருந்தால் நோய் தடுப்பு நடவடிக்கைகளை சட்ட மன்ற உறுப்பினர்களே முன்நின்று நடத்த வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் சட்ட மன்ற குழுத் தலைவர் கே. ஆர். ராமசாமி, “60 வயது தாண்டியவர்களும், அறுவை சிகிச்சை செய்த வர்களும் வெளியில் வரக் கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சட்ட மன்றத்தில் நிறைய பேர் 60 வயதைத் தாண்டி இருக்கி றோம். முதல்வர், துணை முதல்வர், எதிர்க் கட்சித் தலைவர், துணைத் தலை வர், பேரவைத் தலைவர் உள்ளிட்டோரும் 65 வயதை தாண்டியிருக்கும் நிலையில் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டுமா? ஒத்தி வையுங் கள். இதில் அரசியல் உள் நோக்கம் இல்லை”என்றார். சட்டமன்ற கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கருத்தை எம்எல்ஏக் கள் அபுபக்கர், தமீம் அன்சாரி யும் வலியுறுத்தி பேசினர்.
கூட்டம் ஏன்? முதல்வர் விளக்கம்
கொரோனா வைரஸ் பற்றி மக்கள் அறிந்து கொள்ள சட்டமன்றக் கூட்டம் நடைபெற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வெள்ளியன்று(மார்ச் 19) கேள்வி நேரம் முடிந்ததும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டமன்ற கூட்டத் தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி னர். இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனா நோய் தடுப்பு குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இதுவரை 4 முறை ஆலோசனை கூட்டங்களை நடத்தி நிலவரங்களை அறிந்து, பல்வேறு உத்தரவு களை உடனுக்குடன் வழங்கி வருகின்றது” என்றார்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதுமான அளவு தனிமைப்படுத்தி கண்காணிக் கும் பிரிவுகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கண்டறிந்து, அதற்குத் தேவை யான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. பிரதமர் வெளியிட்ட 9 அம்ச நோய்த்தடுப்பு முறைகளை தமிழக அரசு மிக கவ னமாக கடைபிடித்து வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அரசு எடுக்கும் தடுப்பு நடவ டிக்கைகளில் தங்களை சுயமாகவும், முழுமையாக வும் ஈடுபடுத்திக் கொண்டு கொரோனா தொற்று நோய் தமிழ்நாட்டில் பரவாமல் இருக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் முதல்வர் கேட்டுக்கொண்டார். சட்டமன்ற கூட்டம் நடந்து வருவதால் தலைமை செயலகத்திற்கு உள்ளே வரும் அனைத்து வாக னங்களுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகி றது. சட்டமன்றம் நடைபெற்றால்தான், சூழ்நி லையை நாட்டு மக்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும் மக்கள் பணி செய்ய தான் நாம் தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கிறோம். எனவே சட்டப்பேரவை ஒத்தி வைக்க தேவையில்லை என்றும் முதலமைச்சர் தெரி வித்தார்.