tamilnadu

img

கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்க சிறைவாசிகளை விடுதலை செய்க!

முதல்வருக்கு சிறுபான்மை நலக்குழு கடிதம்

 சென்னை, மார்ச் 31- கெரோனா தொற்று நோய் பரவலை தடுக்க இஸ்லாமிய சிறை வாசிகள் உள்பட அனைவரையும் விடுதலை செய்யவேண்டும் என்று  தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழு  தமிழக முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து  அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகம்மது, பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகி யோர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

கொரோனா தொற்று நோய் தற்போது இந்தியாவில் வேகமாகப் பரவி வருகிறது. உயிரிழப்புகள் அறி யப்பட்டு வருகின்றன. மருத்துவ  விஞ்ஞானத்துக்கு மிகப் பெரிய சவா லாக எழுந்துள்ளது. இந்நிலையை நாம் அனைவரும் இணைந்து செயல்  பட்டு முறியடிப்பதற்காகக் களத்தில்  இருக்கிறோம். நோய்த் தொற்று பர வாமல் தடுப்பதற்கும், பாதிக்கப்படு வோர் எண்ணிக்கையைக் குறைப்ப தற்கும் ஒவ்வொருவரும் தனித் திருக்க வேண்டும் என்பதை அனை வரும் கடைப்பிடித்து வருகிறோம். இந்நிலையில், இந்த நியாயத்தை சிறைவாசிகளுக்கும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த  விண்ணப்பத்தைத்  தங்களுக்குக் அளிக்கிறோம். இந்திய நாடு முழு வதும் உள்ள 1,339 சிறைச்சாலை களில் 4,66,088 சிறைவாசிகள் இருப்ப தாக தேசிய குற்ற ஆவணம் தெரி விக்கிறது. கொரோனா தாக்குதலின் தீவிரத்தை குறைக்கும் பொருட்டும், உரிய சிகிச்சை இன்றி சிறைவாசிகள் அவதியுறக்கூடாது என்பதைக் கணக்கில் கொண்டும், 7ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சிறை வாசிகள், அத்தகைய தண்டனைக்கு வாய்ப்புள்ள வழக்குகளில் விசார ணையை எதிர்நோக்கி சிறைச்சாலை களில் இருக்கும் சிறைவாசிகள் ஆகி யோரை மாநில அரசுகள் விடுதலை செய்ய வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மாண்புமிகு சட்டத்  துறை அமைச்சர், சிறைத் துறை  டி.ஜி.பி. ஆகியோர்  17-03-2020  அன்று கூடி உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமலாக்க முடிவுகளை எடுத்  திருக்கிறார்கள். மாவட்டங்களில் உள்ள மாவட்ட நீதிபதிகள் இவை  குறித்து ஆய்வு செய்து உத்தரவு  தரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது. அதன்படி சேலத்தில் ஆய்வு  செய்யப்பட்டது. அங்கு மொத்த முள்ள 800 பேர்களில் 67 சிறைவாசி கள் விடுதலை செய்ய முடி வெடுக்கப்பட்டது.

தமிழ்நாடு சிறைகளில் தற்போது  13,000 சிறைவாசிகள் இருக்கிறார்கள். குற்ற நடைமுறைச் சட்டம் 433 மற்றும்  433ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் மாநில அரசு ஆயுள் சிறைவாசிகளை விடு தலை செய்ய முடியும். அறுபது வய தைக் கடந்து மூப்பு அடைந்தோர், கடுமையாக உடல் நலம் குன்றிய வர்கள், 15, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் காரணமாக கடு மையான மன உளைச்சலுக்கு உள்ளா னவர்கள் போன்றோர் மிகவும் பலவீன மான நிலையில் சிறையில் வாடு கிறார்கள். சிறைவாசிகள் மரணம் குறித்து ஓய்வு பெற்ற சிறைத் துறை ஐஜி    சக்சேனா தலைமையில், மத்திய  அரசு ஒரு கணக்கெடுப்பு நடத்தியது.  அதன்படி, 2018-ஆம் ஆண்டில் மட்டும், இந்திய சிறைகளில் 1,559  சிறைவாசிகள் மரணம் அடைந்தார்கள் என்ற உண்மை  அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது.

கொரோனா தொற்றுக்குப் பிறகு, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடு களில் சிறைவாசிகளுக்கு ஏற்பட் டுள்ள உயிரச்சம், மிகப்பெரிய கொந்த ளிப்பாக மாறி, அந்த அரசுகள் அவர்களை விடுதலை செய்தி ருக்கிறார்கள். எனவே, தமிழக அர சுக்குள்ள அதிகாரத்தைப் பயன்ப டுத்தி, தமிழகத்திலும் வயது மூப்பு, உடல் நலக் குறைவு, நீண்ட காலச் சிறைவாசம் போன்ற வகைகளில் வரு கிற முஸ்லீம் சிறைவாசிகள் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து கொரோனா ஒழிப்புப் போராட் டத்துக்கு வலிமை சேர்க்க வேண்டும் என்று தங்களைக் கேட்டுக் கொள்கி றோம் அதில் ஏதாவது நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமானால், அவர்  களைக் குறைந்தபட்சம் உடனடியாக பரோலில் அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கி றோம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

;