tamilnadu

img

பெ.சண்முகம் இல்லத் திருமண வரவேற்பு விழா

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் - செல்வகுமாரி மகன் நெல்சன் மண்டேலா, எஸ்.வெங்கட்குமார் - லட்சுமி மகள் நியதி சிங்கராஜூ திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் சனிக்கிழமையன்று (ஜூன் 1) நடைபெற்றது. விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் வரவேற்றார்.

சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலை போராட்ட வீரர் ஆர்.நல்லக்கண்ணு, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணை தலைவர் கே.வரதராசன், சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், பி.ஆர்.நடராஜன் எம்பி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், மாதர் சங்க மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி, வடசென்னை செயலாளர் எல்.சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்திப் பேசினர். மத்தியக்குழு உறுப்பினர்கள்  டி.கே.ரங்கராஜன் எம்.பி., பி.சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கே.கனகராஜ் மற்றும் வே.மீனாட்சிசுந்தரம், கல்வியாளர் வசந்திதேவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
 

;