tamilnadu

img

ஒரு லட்சம் வீடுகள்: துணை முதல்வர்

சென்னை, ஜூலை 21- குடிசைப்பகுதிகளற்ற நகரங்களை உருவாக்க ஆயிரத்து  860 கோடி செலவில் ஓரு லட்சத்து 6 ஆயிரம் அடுக்குமாடி குடி யிருப்புகள், வீடுகள் கட்டப்படும் என்று துணை முதலமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் சனிக்கிழமைன்று (ஜூலை 20) குடி யிருப்புகள் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்: அடுக்குமாடிக் குடியிருப்புத் திட்டப்பகுதிகள் மற்றும் குடி சைமாற்றுவாரியத்திற்கு சொந்தமான இதர காலி இடங்க ளில் 500-650 சதுர அடிப்பரப்பில் பொருளாதாரத்தில் நலிவுற்ற,  குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கான அடுக்குமாடியாக ஆயி ரம் குடியிருப்புகள் கட்டி விற்கப்படும்.

சென்னை பெரும்பாக்கத்தில் உலகளவிலான வீடுவசதிக்  கட்டுமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆயிரத்து 152 குடி யிருப்புகள், 121 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். நகர் ஊரமைப்பு இயக்கத்தின் எல்லைக்குட்பட்ட பகுதி கள், சென்னைப் பெருநகர வளர்ச்சிப் பகுதியில் 1200 சதுர  அடிக்கு குறைவான கட்டடத்திற்கு அனுமதி கோரி பெறப்படும்  விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 30 நாட்களுக்குள் அனுமதி  வழங்க தவறும் பட்சத்தில் தானாகவே திட்ட அனுமதி வழங்கப்  பட்டதாக கருதப்படும். சென்னை சோழிங்கநல்லூர், நொளம்பூர், கொரட்டூர், ஜாபர்கான்பேட்டை, காஞ்சிபுரம் பரனூர், ஒசூர் பகுதி-19,  திருப்பூர் முதலிபாளையம், கோவை சிங்காநல்லூர் மற்றும்  புதுக்கோட்டை பகுதி-1 ஆகிய இடங்களில் சுயநிதி திட்டத்தின்  கீழ் ஆயிரத்து 253 குடியிருப்பு அலகுகள் 349 கோடி ரூபாய்  செலவில் கட்டப்படும்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரனூர், மதுரை கூடல் புதூர், தோப்பூர்-உச்சிப்பட்டி ஆகிய இடங்களில் ஆயிரத்து 148 மனை கள் 48 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும். கோவை கணபதி  பகுதியில் உள்ள 9 கோடி ரூபாய் செலவில் வணிக மற்றும் அலு வலக வளாகம் கட்டப்படும். சென்னை, ஈரோடு ஆகிய இடங்க ளில் பயன்படுத்த தகுதியற்ற வாரிய கட்டிடங்களை இடித்து விட்டு 303 குடியிருப்பு அலகுகள் மற்றும் வணிக/அலுவலக  வளாகங்கள் 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் 5 கோடி செலவில்  கூடுதல் வகுப்பறைகளும், 12 கோடி செலவில் மகளிர் விடுதி யும் கட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

;