tamilnadu

img

ஊரடங்கு நிவாரணம் மாதம் ரூ.5000 தர வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நாடு தழுவிய போராட்டம்!

தமிழகத்தில் 850க்கும் மேற்பட்ட மையங்களில் போர்க்கோலம்!

சென்னை, ஜூலை 7- கொரோனா பெருந் தொற்று ஊரடங்கு விலக்கிக்கொள்ளப் படும் வரை மாதந்தோறும் மாற்றுத் திறனாளி ஒவ்வொருவருக்கும் ரூ.5,000/- வாழ்வாதார நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தமிழ்நாட்டில் 850-க்கும் மேற்பட்ட மையங்களில் மாற்றுத் திறனாளிகள் போர்க்கோலம்பூண்ட னர். கோரிக்கைகளை வலியுறுத்தி, பிரதமருக்கும் முதலமைச்சருக்கும் மனுக்கள் அளிக்கப்பட்டன.  சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்றப் போராட்டத் தில் மாநில தலைவர் பா.ஜான்ஸி ராணி பங்கேற்றார்.  கோரிக்கை மனுவை சார் ஆட்சியர் மனுவை பெற்றுக்கொண்டார். 

தென் சென்னை கிண்டியில் மாநி லக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் எஸ்.நம்புராஜன் பங் கேற்றார்.  கிண்டி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் போராட்ட இடத்திற்கு வந்து மனு பெற்றுக் கொண்டார், தருமபுரி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநில பொரு ளாளர் கே.ஆர். சக்கரவர்த்தி, தாம்பரம் தாலுக்கா செம்பாக்கத்தில் மாநில துணைத் தலைவர் பாரதி அண்ணா, சங்கரன்கோவிலில் மாநில துணைச் செயலாளர் எஸ்.கே. மாரியப்பன், அனகாபுத்தூரில் மாநில துணை செயலாளர் கே.பி.பாபு உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் 120, திருவண்ணா மலை-66, தஞ்சை-63, நாகை-50, தருமபுரி-43, வேலூர்-திருப்பத் தூர்- ராணிப்பேட்டை-42, செங்கல் பட்டு-காஞ்சிபுரம்-40, திருப்பூர்-32, குமரி-31, சேலம்-29, விருது நகர்-29, திருவாரூர்-25, விழுப்புரம் -25, நெல்லை-தென்காசி-26, மதுரை புறநகர்-21, விருதுநகர்-14, தென் சென்னை-18, கள்ளக்குறிச்சி-15, ஈரோடு-14, கோவை-12, தென்காசி-10, திருச்சி புறநகர்-10, சிவகங்கை-10, கடலூர்-10, இராமநாதபுரம்-13, கிருஷ்ணகிரி-10, புதுக்கோட்டை-9, வட சென்னை-5, மத்திய சென்னை-3, கரூர்-1என 850-க்கும் கூடுதலான மையங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. ஊனமுற்றோர் உரிமைகளுக் கான தேசிய மேடையின் வேண்டு கோளின்படி  நடந்த இப்போராட்டங் களில் மாநிலம் முழுவதும் 7500க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டு 17,000க்கும் மேற்பட்ட  மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.

;