குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்கம் சூளுரை
ஈரோடு, நவ.19- 2020 அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கு வது என குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் பின்வருமாறு, ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சட்டப்படியான ஊதியம், சட்ட சமூக சலுகைகள், இஎஸ்ஐ, இபிஎப் உள்ளிட்டவை களை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்டத் தலைநகரங்களில் டிசம்பர் இறுதியில் காத்திருக்கும் போராட்டம் நடத்துவது. 2020 ஜனவரி 8 ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் நடை பெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய சிஐடியு உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்பது. ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள அகில இந்திய சிஐடியு மாநாட்டை வெற்றிகர மாக அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.